கர்நாடக தேர்தல் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதை கடந்த மார்ச் மாதமே ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 145 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 82 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 44 இடங்களிலும், ஜேடிஎஸ் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை சரியாக கணித்த ஜோதிடர் ஒருவரின் ட்வீட் மீண்டும் வைரலாகி வருகிறது. ருத்ர் கரன் பிரதாப் என்ற ஜோதிடர் கடந்த மார்ச் 31-ம் தேதி இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ மே மாதம் பாஜகவுக்கு சிறப்பான மாதமாக இருக்காது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக கர்நாடகாவில் உருவெடுக்கும். பாஜகவை விட அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். டி.கே சிவக்குமாரின் யோக திசை பசவராஜ் பொம்மையை விட சிறப்பாக உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சுக்கு நூறாக உடைந்த தேர்தல் வியூகம்.. தென் இந்தியாவில் இருந்து வாஷ் அவுட்டான பாஜக..

மேலும் கடந்த மார்ச் 29-ம் தேதியும் தனது ட்விட்டர் பதிவில் கர்நாடக தேர்தல் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் “ கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு சிறப்பான நேரம் வரப்போகிறது. மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமலே காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏப்ரல் 18-ம் தேதி ட்விட்டர் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் 123 -133 இடங்களில் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இந்நிலையில் இன்று ருத்ர கரன் பிரதாப் தனது கணிப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ மார்ச் மாதத்தில், கணித்தபடி, காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், 2024 தேர்தலுக்கான அடித்தளமாக இதை நினைக்க வேண்டாம். கர்நாடக தேர்தல் தோல்வி மூலம், பாஜக வரும் மாதங்களில் புரட்சிகரமான முடிவுகளை எடுக்கும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக அகற்றம்! காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..