காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை! பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் ஹெல்லைட்ஸ்!
பெங்களூருவில் நடக்கும் பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டத்தில் 2024 பொதுத்தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயரிடுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் குறித்து ஆலோசிக்க 26 எதிர்க்கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் பெங்களூருவில் கூடியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுப்பாகப் பார்க்கலாம்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தங்கள் கட்சிக்கு பிரதமர் பதவி மீது ஆர்வம் இல்லை என்று கூறினார். ஆளும் பாஜகவின் தலைவர்கள் பழைய கூட்டணி கட்சிகளை மீண்டும் ஒட்டவைக்க மாநிலம் விட்டு மாநிலம் ஓடுகிறார்கள் என்றும் கார்கே கூறினார். "நாங்கள் 26 கட்சிகள், 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம்; பாஜக தாமாக 303 இடங்களைப் பெறவில்லை, கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அவர்களைக் கைவிட்டது" என்றும் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I - N - D - I - A (இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி) என்று ஒருமனதாகப் பெயரிடப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி என்ற வார்த்தையை மட்டும் மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளன.
ராய்ப்பூர் சாலையில் இளைஞர்கள் நிர்வாணப் போராட்டம்! சமூக வலைத்தளங்களில் வெளியான ஷாக்கிங் வீடியோ!
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, எதிர்க்கட்சிகளை இணைப்பதில் முன்முயற்சி எடுத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்தியைத் தவிர, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, வெவ்வேறு மாநில முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் மருமகன் அஜித் பவாரின் கிளர்ச்சியால் கட்சி பிளவுபட்ட நிலையிலும் சரத் பவார் இன்று கூட்டத்தில் இணைந்தார்.
இந்த முன்னணியின் பெயரை பரிந்துரைக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் கேட்கப்பட்டதாகவும், அதில் "இந்தியா" என்ற வார்த்தை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டதாவும் தெரிகிறது. "ஒன்றுபட்டு நிற்போம்" என்ற வாசகம் எதிர்க்கட்சிகளின் முழக்கமாக இருக்கும் என முடிவாகியுள்ளதாவும் கூறப்படுகிறது. பொது குறைந்தபட்ச திட்டத்திற்கான ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கான இடம் தனித்தனியாக இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்றமதியில் தமிழ்நாடு நம்பர் 1! நிதி ஆயோக் தரவரிசையில் குஜராத், மகாராஷ்டிரா ஓரங்கட்டி சாதனை!
முன்னதாக நேற்று மாலை தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் நடந்த இரவு உணவு கூட்டத்தில் மம்தா பானர்ஜியும், சோனியா காந்தியும் அருகருகே அமர்ந்திருந்தனர். முன்னதாக அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையிலும் உரையாடினர். அந்தச் பேச்சு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நீடித்தது. அதனால், இரவு உணவுக் கூட்டம் சற்று தாமதம் ஆனதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்தியும் மம்தா பானர்ஜியும் சுமுகமான உறவில் இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு இடையேயான உறவுகள் சமீபத்தில் மோசமாகிவிட்டன. ஆனால், ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற அடுத்த ஆண்டு பாஜகவைத் தோற்கடிப்பதுதான் முன்னுரிமை என்பதை ஒப்புக்கொண்டு இரு கட்சிகளும் கூட்டணிக்கு இணைங்கியுள்ளன.
காங்கிரஸ் இந்தக் கூட்டத்திற்கான இடத்தை கவனமாக தேர்ந்தெடுத்துள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது எதிர்க்கட்சிகளை உற்சாகப்படுத்தியது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் பலத்தையும் நிலைநிறுத்தியுள்ளது. மல்லிகார்ஜுன் கார்கேவின் தலைமையில், காங்கிரஸ் கட்சி மற்ற தலைவர்களின் யோசனைகளை கேட்க விரும்பி மீண்டும் வலியுறுத்தி, அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முன்வந்துள்ளது.
கோழி ரத்தத்தைப் பூசிக்கொண்டு தொழிலதிபர் மீது போலியாக பாலியல் புகார் கூறிய பெண்!