ஸ்ரீனிவாஸ் ஸ்மிருதி இரானி குறித்து பேசியதை பாஜக கடுமையாகக் கண்டித்துள்ளது. நெட்டிசன்களும் தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து, நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றனர்.

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் என்று பேசியுள்ளது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தற்போது வைரலாகிவரும் வீடியோவில், இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய தலைவர் ஶ்ரீனிவாஸ், "ஸ்மிருதி இரானி காது கேளாதவராகவும் ஊமையாகவும் ஆகிவிட்டார். அவருக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். விலை உயர்வு சூனியக்காரியை இப்போது தன் டார்லிங் ஆக மாற்றி படுக்கையறையில் உட்கார வைத்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை.. எல்லாமே போச்சு.!! எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து செய்த தரமான சம்பவம்

Scroll to load tweet…

ஶ்ரீனிவாஸின் இந்தப் பேச்சுசை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக சாடியுள்ளது. பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, "இந்த அநாகரீகமான, பாலியல் வெறி பிடித்த நபர்தான் இளைஞர் காங்கிரஸின் தலைவர். அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்ததற்காக ஒரு பெண் அமைச்சர் குறித்து இதுபோல பேசுகிறார். காங்கிரஸ் விரக்தியில் தகாத பாதைகளில் செல்கிறது" என்று கூறியுள்ளார்.

சமூக ஊடக பயனர்கள் பலர் தேசிய மகளிர் ஆணையம் ஶ்ரீனிவாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றனர். அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றிய இந்த அருவருப்பான பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறையிடமும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், தனது பேச்சு பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீனிவாஸ், தன் குற்றம் சாட்டுவதற்கு வசதியாக வீடியோவின் ஒரு பகுதி மட்டும் பகிரப்படுவதாகக் கூறியுள்ளார். "சங்கிகள் திருத்தமாட்டார்கள். முழுமையான பேச்சை விட்டுவிட்டு, ஒரு பகுதியை மட்டும் வைத்து விளையாடுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

Scroll to load tweet…

மேலும், "2014ஆம் ஆண்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.400 ஆக இருந்தபோது, விலை உயர்வு மக்களுக்கு சூனியக்காரி போலத் தெரிவதாக அவர் (​​ஸ்மிருதி இரானி) பேசினார். இப்போது சிலிண்டர் விலை ரூ.1100 ஐ எட்டியுள்ளது. அதைத்தான் இப்போது சூனியக்காரி அழகாக மாறிவிட்தாகக் குறிப்பிட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். தன் ட்விட்டர் பதிவில் பேச்சின் முழு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

ராகுலுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானது… பிரசாந்த் கிஷோர் கருத்து!!