ராகுலுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானது… பிரசாந்த் கிஷோர் கருத்து!!
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக தோன்றுவதாக தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக தோன்றுவதாக தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஜேடிஎஸ் பஞ்சரத்ன யாத்திரையில் எஞ்சிய உணவைத் தின்ற 15 கால்நடைகள் சாவு
அந்த வகையில், தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், நான் சட்ட நிபுணர் அல்ல. இருப்பினும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக தோன்றுகிறது. தேர்தலின் போது மக்கள் அனைத்து வித நிகழ்வுகளையும் நினைவுகூறுவர். இது முதல் நிகழ்வும் அல்ல, கடைசி நிகழ்வாகவும் இருக்கப்போவதில்லை.
இதையும் படிங்க: 250 ஆண்டுகள் சிறை தண்டனை! ரூ.4000 கோடி சிட்பண்ட் மோசடி வழக்கில் அதிரடி தீர்ப்பு
எனவே, மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு, சிறிய இதயம் படைத்த யாரும் மாமனிதர்களாக மாற மாட்டார்கள் என்ற அடல்பிகாரி வாஜ்பாயியின் பிரபலமான வரியை நினைவுபடுத்த விரும்புகிறேன். பாஜக-வினர் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அவர்கள் பெரிய மனதைக் காட்டி இருக்க வேண்டும். அவர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருந்து இருக்க வேண்டும். ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, அங்கு நிவாரணம் கிடைக்காதபோது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.