Watch: ரவுடி ஆசிக் அகமது கல்லறையில் தேசியக் கொடியை போர்த்தி முழக்கமிட்ட காங்கிரஸ் தலைவர்
ரவுடியாக இருந்து அரசியலில் குதித்த ஆசிக் அகமதுவின் கல்லறையில் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் ராஜு தேசியக் கொடியை போர்த்தி முழக்கமிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் ராஜு, ரவுடி கும்பலில் தாதாவாக இருந்து அரசியல்வாதியான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப்பின் கல்லறையில் தேசியக் கொடிப் போர்த்தி ஏற்றி முழக்கமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லறையில் 'கல்மா' ஓதிய ராஜு அதிக் மற்றும் அஷ்ரஃப் ஆகியோருக்கு மரியாதை பெற போராடுவேன் என்று கூறியுள்ளார்.
வீடியோவில் ராஜ்குமார் ராஜு கல்லறையில் மூவர்ணக் கொடியைப் போர்த்தி கல்மா ஓதுவதையும் "அதிக் பாய் அமர் ரஹே..." என்று கூறுவதையும் காணமுடிகிறது.
முன்னதாக, உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற முனிசிபல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ராஜ்குமார் சிங் என்ற ராஜு பையா, அதிக் அகமதுவை ஒரு தியாகி என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். அதுமட்டுமின்றி அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
பிரதமர் மோடியைச் சந்தித்த ஆப்பிள் சிஇஓ டிம் குக்! எதிர்காலத்தில் முதலீடுகளை அதிகரிக்க திட்டம்!
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுதான் அதிக் அகமது கொலைக்கு காரணம் என்று ராஜு குற்றம் சாட்டினார். முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வேட்பாளர் வலியுறுத்தினார். ஆதிக் அகமதுவுக்கான தனது பாரத ரத்னா விருது கோரிக்கையை நியாயப்படுத்திய ரஜ்ஜு பாய்யா, மறைந்த முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷண் கிடைக்குமானால், அதிக் அகமது ஏன் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவைப் பெறக்கூடாது என்றார்.
ரூ.1000 க்கு 7.5 சதவீதம் வட்டி! சிறப்பு சேமிப்புத் திட்டம்... பெண்களுக்கு மட்டும்!
தெற்கு மலாகா மாநகராட்சியின் வார்டு எண் 43 லிருந்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராஜு கடும் எதிர்ப்புக்குப் பிறகு கட்சியால் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி இரவு பிரயாக்ராஜில் உள்ள மருத்துவக் கல்லூரி அருகே ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் 3 மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். உத்தரபிரதேச போலீசார் அதிக் அகமது கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். உமேஷ் பால் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்காக பிரயாக்ராஜுக்கு அழைத்துவரப்பட்டபோது சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பியான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, ஏப்ரல் 13ஆம் தேதி ஜான்சியில் போலீஸ் என்கவுன்டரில் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் கொல்லப்பட்டனர். ஆசாத் மற்றும் அவரது உதவியாளர் குலாம் இருவரும் பரபரப்பை ஏற்படுத்திய உமேஷ் பால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர்.
நடிகையின் கன்னத்தைக் கிள்ளிய எடியூரப்பா! சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம்!