நடிகையின் கன்னத்தைக் கிள்ளிய எடியூரப்பா! சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம்!
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஷிகாரிபுராவில் பொது இடத்தில் வைத்து நடிகை சுருதியின் கன்னத்தைக் கிள்ளி பாராட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இச்சூழலில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஷிகாரிபுராவில் பொது இடத்தில் வைத்து நடிகை சுருதியின் கன்னத்தைக் கிள்ளி பாராட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விஜயேந்திரா இன்று ஷிகாரிபுரா தொகுதிக்குச் சென்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றார். அப்போது அவரது தந்தை எடியூரப்பா, பாஜக ஆதரவாளரான நடிகை சுருதி ஆகியோரும் சென்றிருந்தனர்.
அப்போது எடியூரப்பா அனைவர் முன்னிலையில் பொது இடத்தில் நடிகை சுருதியின் கன்னத்தைக் கிள்ளியும், தோளில் தட்டியும் பாராட்டினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா எடியூரப்பாவின் அரசியல் வாரிசாகக் கருதப்படுகிறார். ஜூலை மாதம் தந்தை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து விஜயேந்திரா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், விஜயேந்திரா பாஜகவின் நட்சத்திர பிரச்சாரத் தலைவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.