மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் சட்டவிரோதமாக மதுபான விடுதி வைத்திருக்கிறார் என்ற செய்திதான் தற்போதைய ட்ரெண்டிங் டாபிக் ஆக இருக்கிறது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் ராணி. இவர் கோவாவில் உள்ள அஸ்ஸாகவோ பகுதியில் சொகுசு மதுமான விடுதி மற்றும் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மதுபான விடுதியின் உரிமம் முடிந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் அந்தோணி காமா என்ற பெயரில் உரிமத்திற்காக விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் அந்த விண்ணப்பத்தை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்தோணி காமா கடந்த 2021ம் ஆண்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் ஸோய்ஸ் ராணி ரெஸ்டாரண்டு ஆவணங்களை போலியாக தயாரித்து லைசன்ஸ் பெற்றதாக சுங்கவரித்துறை ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஜூலை 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் சட்டவிரோதமாக மதுபான விடுதி வைத்திருக்கிறார், அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்மிருதி இரானியின் வழக்கறிஞர், ‘கோவாவில் உள்ள சில்லி சோல்ஸ் கோவா மதுபான விடுதிக்கு அவர் உரிமையாளர் இல்லை. அவர் அதை எடுத்து நடத்தவும் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை’ என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக உண்மையை பேசியதால் என் மகள் குறிவைக்கப்படுகிறாள். 2014 மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து நான் போட்டியிட்டது தான் என் செய்த தவறு. ஆனால் இன்னும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். 2024ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால், அவர் தோல்வியடைவது உறுதி.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை எதிர்க்கட்சிகள் வெளியிட வேண்டும் என்று கூறி ராகுல் காந்திக்கு சவால் விட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களான பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு ஸ்மிருதி இரானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !
