பெண்கள் கொடுமையில் இருந்து காக்கும் வகையில், அனைத்து திருமணங்களையும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திட்டவிட்டமாகத் தெரிவித்துள்ளது.

அதேசமயம், திருமணப் பதிவோடு, ஆதார் எண்ணை எண்ணை இணஐக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்ெதரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் பேசுகையில், “ திருமணம் செய்ததற்கு உறுதியான ஆதாரம் வழங்க வேண்டும் என்பதற்காகவும், விவாகரத்து வழக்குகளை நடத்தவும், பெண்கள் கொடுமைப் படுத்தப்படுதலில் இருந்து தடுக்கவும், அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வது கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களும் தங்கள் மதத்தின் அடிப்படையில் திருமணம் செய்தபின், அதை கண்டிப்பாக பதிவுசெய்ய வேண்டும் என உத்தரவிட்டது’’ என்றார்.

இதற்கிடையே மத்திய சட்ட அமைச்சகம் சமீபத்தில் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் “ போலி திருமணங்களை தடுத்தல், உண்ைமயை மறைத்து ஒருவர் பல திருமணங்கள் செய்தல், பெண்களை கொடுமையில் இருந்து தடுத்தல் ஆகியவற்றுக்காக திருமணங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.