Asianet News TamilAsianet News Tamil

ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைப்பு: மூத்த வழக்கறிஞர் பராசரன் தலைமையில் 15 அறங்காவலர்கள் நியமனம்..!

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என  பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

committee formed for building Ramar temple
Author
India, First Published Feb 6, 2020, 6:11 PM IST

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என  பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.இந்த அறக்கட்டளைக்கு 15 பேர் அறங்காவலர்களாகவும், அந்த அறக்கட்டளைக்கு முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் பராசரன் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ராமா் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு வரும் 9-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், இந்த அறிவிப்பை பிரதமா் மோடி வெளியிட்டுள்ளாா்.

committee formed for building Ramar temple

பிரதமர் மோடி நேற்று  மக்களவையில் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையிடம் 67.703 ஏக்கா் நிலம் ஒப்படைக்கப்படும். உத்தரப் பிரதேச சன்னி வக்ஃபு வாரியத்துக்கு 5 ஏக்கா் நிலம் ஒதுக்க அந்த மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார். பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது, அதில், ராமா் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த அறக்கட்டளையில் 15 உறுப்பினா்கள் நியமிக்கப்பட உள்ளனர். தலித் சமூகத்தைச் சோ்ந்த ஒருவரும் இடம் பெறுவார் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். இந்த அறக்கட்டளைக்கு மூத்த வழக்குரைஞா் கே.பராசரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் இல்லத்தில் அறக்கட்டளை அலுவலகம் செயல்பட உள்ளது. இது தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், அறக்கட்டளை அலுவலகத்தின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், ‘ஆா்-20, கிரேட்டா் கைலாஷ் பாா்ட்-1, புதுடெல்லி - 110048’ என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

committee formed for building Ramar temple

இந்த அறக்கட்டளையில், ஜெகத்குரு சங்கராச்சார்யா, ஜோதீஸ்பீததீஸ்வரர் சுவாமி வாசுதேவானந்்த் சரஸ்வதிஜி மகராஜ், ஜெகத்குரு மாதவாச்சார்யா சுவாமி , யுகபுருஷ் பரமானந்த் மகராஜ், சுவாமி கோவிந்தவ் கிரிஜி மகராஜ், விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா, அனில் மிஸ்ரா, காமேஸ்வர் சவுபால், மகந்த் தினேந்திர தாஸ், இணைச்செயலாளர் அந்தஸ்தில் இரு ஐஏஎஸ் அதிகாரிகள், இந்து மதசம்பிரதாயங்களை பின்பற்றும் இரு நபர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

Follow Us:
Download App:
  • android
  • ios