colleges will closed
நாட்டில் எண்ணிலடங்கா கல்லூரிகள் ஆங்காங்கு திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த கல்லூரிகள் சரியாகத்தான் இயங்குகிறதா என்ற கேள்விக்கு பதில் சந்தேகமாகத்தான் உள்ளது .
அதன் படி, சரியாக செயல்படமால் உள்ள பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூட உள்ளதாகவும் அல்லது திறம்பட செயல்படும் பல்கலைக்கழகங்களுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது .
மத்திய பல்கலைக்கழக மானிய குழு நிர்வாகத்திலும் பல முக்கிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.அதன்படி, பல கல்லூரியின் தரத்தை ஆராய்ந்து, கல்லூரியை மூடுவது குறித்தமு க்கிய முடிவுகள் எடுக்கப்படும் .
தரத்தின் அடிப்படையில் கல்லூரியை மூடுவதற்கு 3 பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளது .அதன்படி
- சிறந்த கல்லூரிகள்
- மேம்படுத்த வாய்ப்பு உள்ள கல்லூரிகள்
- மிகவும் மோசமான நிலைமை
இந்த மூன்று வகையில் தரத்தின் அடிப்படையில் கல்லூரிகளை பிரித்து , அதற்கேற்றார் போல் நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் மோசமான நிலையில் செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு கடைசி வாய்ப்பு வழங்க உள்ளதாகவும், அவ்வாறு வாய்ப்பு கொடுக்கப்பட்டும் சரிவர இயங்கவில்லை என்றால், கட்டாயம் அந்த கல்லூரியை மூடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது ...
இதன் மூலம் சரி வர இயங்காமல் இருந்த கல்லூரிகளால், மாணவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது .ஆனால், மத்திய அரசின் இந்த முடிவால் இனி எந்த மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்காது என நம்பப்படுகிறது
