உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை டெல்லியில் இன்று உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து அவரது  இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் (89) உடல்நலக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த  அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மார்ச் 15ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது இறுதிசடங்குகள் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க போவதில்லை என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். ஊரடங்கு மற்றும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.