Gujarat school wall collapse : மதிய உணவு இடைவேளையின் போது இடிந்து விழுந்து பள்ளி வகுப்பறை சுவர்.. வீடியோ..

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ல தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறை சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

Classroom wall collapse at private school in gujarat student injured watch video Rya

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ல தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறை சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார். குஜராத்தின் வகோடியா சாலையில் உள்ள ஸ்ரீ நாராயண் குருகுலப் பள்ளியின் முதல் தளத்தில் அமைந்திருந்த வகுப்பறையின் சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த  7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு முதல்கட்ட சிகிச்சைக்கு வழங்கப்பட்டது. தற்போது அவரின் உடல்நிலை தேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின் போது இச்சம்பவம் நடந்ததாக பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார். பள்ளி முதல்வர் ரூபால் ஷா இதுகுறித்து பேசிய போது “ பலத்த சத்தம் கேட்டதை அடுத்து நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். ஒரு மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மற்ற மாணவர்களை உடனடியாக வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினோம். என்று பள்ளி முதல்வர் ரூபால் ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

NEET UG 2024 தேர்வு முடிவுகள் வெளியானது! தேர்வு மையம் வாரியாக மதிப்பெண்களை சரிபார்ப்பது எப்படி?

மாணவர்களின் மிதிவண்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தின் மீது சுவர் இடிந்து விழுந்ததால், பல சைக்கிள்களுக்கு சேதம் ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

வகுப்பறையின் சுவர் இந்த தகவல் கிடைத்ததும், வதோதரா தீயணைப்புத் துறை குழுவினர் பள்ளிக்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் வகுப்பறையின் சுவர் இடிந்து விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

அந்த பள்ளியில் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட துறை அதிகாரி வினோத் மோஹிதே இதுகுறித்து பேசிய போது, "சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக பள்ளியிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தோம். 7 ஆம் வகுப்பு மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 10-12 மாணவர்களின் சைக்கிள்கள் சேதமடைந்தன.. சுவரின் இடிபாடுகளை நாங்கள் அகற்றினோம்” என்று தெரிவித்தார்.

கேரளா.. 8 ஆண்டுகளில் 800க்கும் அதிகமான யானைகள் மரணம் - வைரஸ் தாக்குதல் தான் காரணமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios