NEET UG 2024 தேர்வு முடிவுகள் வெளியானது! தேர்வு மையம் வாரியாக மதிப்பெண்களை சரிபார்ப்பது எப்படி?
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்கள் நகரம் மற்றும் மையம் வாரியாக மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்ப்பது என்பதை இங்கே காணலாம்.
தேசிய தேர்வு முகமையான NTA, நடைபெற்று முடிந்த NEET UG 2024 தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவு Neet தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள், exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்திலும், NTA NEET-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.ntaonline.in முடிவுகளைப் பார்க்கலாம்.
NEET UG முதன்மைத் தேர்வு கடந்த மே 5, 2024 அன்று நடைபெற்றது. NEET UG முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக சர்ச்சை எழுத்ததையுடுத்து, சிலருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு ஜூன் 23ம் தேதி மறுதேர்வு அன்று நடத்தப்பட்டது அதன் முடிவுகள் ஜூன் 30 அன்று அறிவிக்கப்பட்டது. அந்த மறுதேர்வில் மொத்தம் 1563 தேர்வர்கள் தேர்வெழுதினர்.
Neet Exam - UG Row | நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை! அது முழு தேர்வையும் பாதித்ததா? NTA-வுக்கு SC கேள்வி!
NEET UG 2024 முடிவுகள்! - ஆன்லைனில் மதிப்பெண்களை சரிபார்ப்பது எப்படி?
அனைத்து விண்ணப்பதாரர்களும் இணையதளத்தில் மதிப்பெண்களை சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.
- NTA NEET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- அதன் முன் பக்கத்தில் கிடைக்கும் NEET UG Result 2024 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
- உள்ளீடுகள் சரியாக இருப்பின் முடிவு திரையில் காட்டப்படும்.
- முடிவைச் சரிபார்த்து பக்கத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் NEET இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.
யூனியன் பட்ஜெட் 2024-25.. மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் சீதாராமன்!