Asianet News TamilAsianet News Tamil

Indian Navy: இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்: கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்திய கடற்படை

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்திய கடற்படை என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Chinese research vessel movement in the Indian Ocean is being closely watched by the Indian Navy,
Author
First Published Nov 5, 2022, 9:59 AM IST

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்திய கடற்படை என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் “ சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் நடமாட்டம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகரித்துள்ளது. இந்திய கடற்படையும், இந்திய பெருங்கடல் பகுதியில் முகாமிட்டுள்ளது. வான்வழியாகவும், செயற்கைக்கோள் மூலமும் சீன ஆராய்ச்சிக் கப்பல் இந்தியாவை நோட்டமிடுகிறதா என்பதை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. 

கே.ஜி.எஃப் 2 பாடலால் ராகுல் காந்திக்கு வந்த சிக்கல்... வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு

இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் இருந்தாலும், இந்தியாவின் எல்லைப்புற கடல்பகுதியிலிருந்து தொலைவில்தான் இருக்கிறது. அதனால், சீன ஆராய்ச்சிக் கப்பல் அமைதியாக இருக்கிறது, எதையும் நோட்டமிடவில்லை என்று கூறவிட முடியாது. சீனாவின் நோக்கத்தையும் சாதாரணமாக எடுக்க முடியாது” எனத் தெரிவித்தனர்

கடந்த முறை இலங்கைக்கு சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் வந்து ஒருவாரம் நங்கூரமிட்டது. அப்போதுதான் இந்தியாவின், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்ச்சி நடந்தது. 

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்.. மாற்று வழி இதுதான் ! தேவசம்போர்டு அறிவிப்பு

இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் சமீபகாலமாக சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ரோந்து அதிகரித்துள்ளது மூலம், இந்திய பசிப் பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

கடற்படை அட்மிரல் ஆர் ஹரி குமார் அதிகாரிகள் மத்தியில் நேற்றுமுன்தினம் பேசுகையில் “எந்த கொந்தளிப்பான சூழ்நிலையிலும் செல்லவும்  போருக்கு தயாரான, நம்பகமான, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்கால நம்பிக்கை சக்தியாக இந்திய கடற்படை இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

திகார் சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவித்த சுகேஷ் சந்திரசேகர்; உதவிய போலீஸ் அதிகாரிக்கு பணியிட மாற்றம்!!

முப்படைகளின் தலைமை அதிகாரியான சிடிஎஸ் ஜெனரல்  அனில் சவுகான் கூறுகையில் “இந்தியாவின் தேசியப் பாதுகாப்புத் தேவைகளை கூட்டாகச் சந்திப்பதற்கு, தயாராகவும் தன்னிறைவுடனும், ஆயுதப் படைகளில் ஒருங்கிணைப்பும் வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow Us:
Download App:
  • android
  • ios