சென்னை - திருப்பதி இடையே தமிழகத்திற்கு 3வது வந்தே பாரத் ரயில்?
சென்னையில் இருந்து மைசூரு, கோவைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களைத் தொடர்ந்து சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகச் சென்னையிலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரயில் வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் இயக்கப்படும என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசு அதிவேக ரயில் பயண வசதியை ஏற்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் மிக வேகமாகச் செல்லும் ரயில்களாக உள்ளன. இவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.
ம.பி. பழங்குடி கிராமத்திற்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி
ஏற்கெனவே தமிழகத்திற்கு இரண்டு வந்தே பாரத் ரயில்கள் கிடைத்துள்ளன. சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கும் ஒரு ரயில் இயக்கப்படுகிறது. மற்றொரு வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரை இயக்கப்படுகிறது.
இந்நிலையில் மூன்றாவது ரயிலாகச் சென்னையில் இருந்து மதுரை வழியாக நெல்லை வரை ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சென்னையில் இருந்து திருப்பதிக்கு மூன்றாவது ரயில் இயக்கப்படும் என்றும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 7ஆம் தேதி) அந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் தென் மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் மதுரையில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூருக்கு நான் கேரண்டி! அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தில்லான அறிவிப்பு