ம.பி. பழங்குடி கிராமத்திற்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தில் உள்ள பகாரியா கிராமத்தில் பிரதமர் மோடி பழங்குடியின மக்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாஹோல் மாவட்டத்திற்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு பழங்குடி மக்களின் கலாச்சார கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களுடன் கலந்துரையாடினார். பழங்குடி சமூகத் தலைவர்கள், சுயஉதவி குழுக்கள், கால்பந்து விளையாட்டு வீரர்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார்.
முன்னதாக, பிரதமர் மோடி தேசிய இரத்த சோகை ஒழிப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மத்திய பிரதேசத்தில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் சுமார் 3.57 கோடி பேருக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
மணிப்பூருக்கு நான் கேரண்டி! அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தில்லான அறிவிப்பு
இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்துப் பேசிய பிரதமர் மோடி, மத்தியில் ஆட்சி செய்த முந்தைய அரசாங்கங்கள் பழங்குடி சமூகங்கள் மற்றும் ஏழைகளை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டினார்.
"முந்தைய அரசுகள் பழங்குடியினர் மற்றும் ஏழைகள் மீது அக்கறை அற்றதாகவும், அவமரியாதையுடனும் செயல்பட்டன. பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவர் ஆனதற்கு பல கட்சிகள் எப்படி நடந்துகொண்டன என்பதைப் பார்த்தோம்" என்றார்.
மனிதாபிமானம் செத்துருச்சு! தூங்கும் பயணிகளை தண்ணீரைக் கொட்டி எழுப்பும் ரயில்வே போலீஸ்!
ஷாஹ்டோலில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டபோது, அவர்கள் (காங்கிரஸ்) அதற்கு தங்கள் குடும்பத்தின் பெயரைச் சூட்டினர். இருப்பினும், சிவராஜ் சிங் சௌஹான் அரசு, புரட்சியாளர் ராஜா சங்கர் ஷாவின் நினைவாக சிந்த்வாடா பல்கலைக்கழகத்திற்கு பெயரிட்டது. பாதல் பானி நிலையத்திற்கு புரட்சியாளர் தந்தியா தோப் பெயரைச் சூட்டியுள்ளோம். இது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.
மேலும் மத்திய பிரதேசத்தில் 1 கோடி பேர் ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் அட்டைகளைப் பெற்றுள்ளனர் என்றும் பிரதமர் மோடி கூறினார்.