Asianet News TamilAsianet News Tamil

குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு… 18 ஆக குறந்தது சிறுத்தைகளின் எண்ணிக்கை!!

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட மற்றொரு சிறுத்தையும், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் உயிரிழந்தது. 

cheetah death was reported in madhya pradeshs kuno national park
Author
First Published Apr 23, 2023, 10:27 PM IST | Last Updated Apr 23, 2023, 10:27 PM IST

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட மற்றொரு சிறுத்தையும், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் உயிரிழந்தது. தென்னாப்பிரிக்காவில் இருந்து மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு இந்த ஆண்டு பிப்ரவரி 18 அன்று 11 சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டது. அதில் உதய் என்றழைக்கப்படும் சிறுத்தைக்கு இன்று காலை (ஏப்.23) உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனை கவனித்த வனக் குழுவினர் அதனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படிங்க: சூடானில் இருந்து இந்தியர்களை மீட்க 2 விமானங்கள், ஒரு கப்பல் தயார்: வெளியுறவுத்துறை தகவல்

அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாலை 4 மணியளவில் சிறுத்தை உயிரிழந்தது. இதை அடுத்து அந்த சிறுத்தைக்கு நாளை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர். முழு பிரேத பரிசோதனையும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. குனோ தேசிய பூங்காவில் இது இரண்டாவது சிறுத்தை இறப்பு ஆகும்.

இதையும் படிங்க: பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டம்: நாளை ம.பி. செல்கிறார் பிரதமர் மோடி

நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து இருபது சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன. நமீபியாவில் இருந்து கடந்த ஆண்டு குனோ தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு சிறுத்தைகளில் ஒன்றான சாஷா, மார்ச் மாதம் இறந்தது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சிறுத்தை இறந்ததால், எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios