Asianet News TamilAsianet News Tamil

தடை செய்யப்பட்ட வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!

பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் , பூட்டான், பஹ்ரைன், மொரீஷியஸ், இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதிஉ செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

Centre allows export of onion to six countries smp
Author
First Published Apr 28, 2024, 12:14 PM IST

வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீஷியஸ், இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-24 ஆம் ஆண்டில் காரீஃப் மற்றும் ரபி பயிர்கள் குறைவாக மதிப்பிடப்பட்டதால், போதுமான அளவு உள்நாட்டில் கிடைக்கும் தன்மையை உறுதி செய்யவும், சர்வதேச சந்தையில் தேவை அதிகரிக்கும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கான ஏஜென்சியான தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (என்.சி.இ.எல்), உள்நாட்டு வெங்காயத்தை இ-பிளாட்ஃபார்ம் மூலம் எல் 1 விலையில் ஏற்றுமதி செய்து, அந்த நாடுகளின் ஏஜென்சிகள் அல்லது அந்த நாடுகளின் அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஏஜென்சிகளுக்கு 100%  பணத்தை முன்கூட்டியே செலுத்தும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தை வாங்குபவர்களுக்கு வழங்கல் விகிதம், அந்த நாடுகளின் சந்தை மற்றும் சர்வதேச உள்நாட்டு சந்தைகளில் நிலவும் விலைகளை என்சிஇஎல் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

இந்தியா கூட்டணியில் ஒராண்டில் 2 அல்லது 4 பிரதமர்கள்: சஞ்சய் ராவத் கருத்து!

ஆறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு, அந்தந்த நாடுகள் கேட்டுக் கொள்வதற்கினங்க வழங்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தியாளரான மகாராஷ்டிரா மாநிலம், தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட்டின் முக்கிய சப்ளையராக உள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளுக்காக விசேசமாக பயிரிடப்பட்ட 2000 மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முற்றிலும் ஏற்றுமதி சார்ந்ததாக இருப்பதால், அதிக விதை விலை, நல்ல விவசாய நடைமுறையை பின்பற்றுதல் மற்றும் கடுமையான அதிகபட்ச வரம்புகளின் தேவைகளுக்கு இணங்குதல் ஆகியவற்றின் காரணமாக வெள்ளை வெங்காயத்தின் உற்பத்தி செலவு மற்ற வெங்காயங்களை விட அதிகமாக உள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios