மத்திய உளவுத் துறைக்கு புதிய தலைவர்…மோடி அரசு நியமனம்…

மத்திய உளவுத்துறையின் தலைவராக இருந்து வருபவர் தினேஷ்வர் சர்மா. இவர் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து உளவுத்துறைக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உளவுத்துறையின் புதிய தலைவராக திரு.ராஜீவ் ஜெயினை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது, இதனையடுத்து ராஜீவ் ஜெயினை உளவுத் துறை தலைவராக மத்திய அரசு நேற்று நியமித்தது.

இவர் 1980-ம் ஆண்டின் ஜார்கண்ட் மாநில ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரிவை சேர்ந்தவர்.டெல்லி மற்றும் குஜராத்தில் மாநில அரசு உளவுத்துறை தலைவராக இவர் பணியாற்றியுள்ளார்..

இதேபோன்றுரா எனப்படும் வெளிநாட்டு உளவு அமைப்பின் தலைவர் பதவி வகிக்கும் ராஜிந்தர் கன்னாவும் இம்மாத கடைசியில் ஓய்வு பெறுகிறார்.

அந்த இடத்துக்கு மத்திய பிரதேச மாநில ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரிவை சேர்ந்த அனில் தஸ்மானா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.