cbi planning to catch junior mallya

வங்கிகளிடம் ரூ.6,500 கோடி கடன் பெற்று, துபாயில் தலைமறைவாக இருக்கும், ஜூனியர் மல்லையா” என அழைக்கப்படும் வின்சன் டைமன்ட்ஸ் மற்றும் ஜூவல்லரி குழுமத்தின் தலைவர் ஜதின் மேத்தாவை கைது செய்து இந்தியா கொண்டு வர சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் துபாய் செல்கிறார்கள்.

வங்கிகளிடம் ரூ.9ஆயிரம் கோடி கடன்பெற்று லண்டனில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவைப் பிடிக்க சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சென்றுள்ள நிலையில், இப்போது ஜிதின் மேத்தா பக்கம் கவனம் திரும்பியுள்ளது.

டெல்லி,மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வின்சன் டைமன்ட்ஸ் மற்றும் ஜூவல்லரி என்ற நகை இறக்குமதி, ஏற்றுமதி தொழில் செய்தவர் ஜிதன் மேத்தா. தனது தொழிலுக்காக கனரா வங்கி, சென்ட்ரல் வங்கி, ஓரியன்டல்பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஆக்சிஸ் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ. சின்டிகேட் வங்கி, உள்ளிட்ட 15 வங்கிகளில் ரூ.6 ஆயிரத்து 500 கோடி கடன் பெற்று இருந்தார். பங்குச்சந்தையிலும் மேத்தாவின் நிறுவனம் இடம் பெற்று இருந்து.

நாட்டில் விஜய் மல்லையாவுக்கு அடுத்தார்போல், வங்கிகளில் அதிக கடன் பெற்ற நபராக மேத்தா இருந்து வந்தார். தங்கத்தை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, நகைகள் தயாரித்து ஏற்றுமதி செய்து வந்தார். முக்கியஏற்றுமதியாளராக துபாயில் ஏராளமான வர்த்தகர்கள் மேத்தாவுக்கு இருந்தனர். இந்நிலையில், திடீரென தொழிலில் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, நேபாளம் வழியாக, துபாய்க்கு தப்பி ஓடினார்.

இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் நிதின் மேத்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை இந்தியாவுக்கு கொண்டு வரக் கோரினார்.

இதையடுத்து அமலாக்கப்பிரிவு, சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. அந்த அமைப்பினர் தொடர்ந்து விசாரணை நடத்தி, துபாயில் உள்ள அதிகாரிகளிடம் நிதின் மேத்தாவை நாடு கடத்துமாறு கடந்த ஆண்டு துதரகம் மூலம் கடிதம் எழுதி நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அதிகாரிகள் இந்திய நிதித்துறை புலணாய்வு பிரிவினரிடம் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நிதின் மேத்தாவை நாடு கடத்த துபாய் அதிகாரிகளுக்கு முறைப்படி கடந்த ஆண்டு கடிதம் எழுதப்பட்டுவிட்டது. இந்த விசயத்தில் துபாய் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதுமட்டுமல்லாமல், துபாயில் மிக எளிதாக குடியுரிமையை மேத்தாவால் வாங்கிவிட முடியாது.

அதேசமயம், துபாய், இந்தியா இடையே கைதிகளை பரிமாற்றம் செய்யும் எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆதலால், உதவிகள் அடிப்படையில்தான் அவரை கொண்டு வர முடியும். இந்திய வங்கிகளுக்கு ரூ.6500 கோடி செலுத்தாமல் இருப்பதால், நிதின் மேத்தாவை கைது செய்ய உதவுங்கள் எனக் கேட்டுள்ளோம், சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் அங்கு செல்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்க வங்கிகள் அவரின் அசையா சொத்துக்களை ஏலத்தில் விட்டு கடனை வசூலித்து வருகின்றன. ஆனால், நிதின் மேத்தாவிடம் அப்படி எந்தவிதமான சொத்துக்களும் கிடையாது என்பதால், அவரிடம் இருந்து கடனை வசூலிப்பது என்பது பெரும் சிரமமான காரியமாகவே வங்கிகளுக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது.