சாதி, வர்ணம் கைவிடப்பட வேண்டும்.. முடிந்துபோன விஷயம் என கடந்து செல்ல வேண்டும்.. RSS தலைவர் மோகன் பகவத்.

சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வர்ணம் மற்றும் சாதியவாத கருத்துக்களை முற்றிலும் கைவிட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

 

Caste and Varna should be abandoned..these should be considered as a thing of the past..RSS leader Mohan Bhagwat.

சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வர்ணம் மற்றும் சாதியவாத கருத்துக்களை முற்றிலும் கைவிட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

இவைகள் பற்றி யாராவது கேட்டால் வர்ணம் சாதி போன்றவை  முடிந்து போன விஷயம் என கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்துக்கள் ஒருபோதும் சிறுபான்மையினருக்கு ஆபத்தானவர்கள் இல்லை, அது இந்துக்களின் இயல்பும் அல்ல, சகோதரத்துவத்தின் பக்கம் நிற்பது தான் இந்துக்களின் இயல்பு என மோகன் பகவத் கடந்த புதன்கிழமை பேசியிருந்த நிலையில் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

Caste and Varna should be abandoned..these should be considered as a thing of the past..RSS leader Mohan Bhagwat.

சமீபகாலமாக வர்ணம், சாதி மதபேதம் தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சாதிமத வெறுப்பு பேச்சுகள், அதை ஒட்டிய வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இந்துத்துவமும், ஆர்எஸெஎஸ்சும், மனுதர்ம கோட்பாடுகளும் தான் காரணம் என பல்வேறு எதிர்க் கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.

அதேநேரத்தில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் குறி வைத்து தாக்கப்படுவதாகவும் ஆதங்க குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக கடந்த புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்துக்கள் சிறுபான்மையினரை அச்சுறுத்துவதாக கூறப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: அதிமுக வேஸ்ட்.. பாஜகதான் ரியல் எதிர்க்கட்சி.. எடப்பாடி பழனிச்சாமியை அடித்து தூக்கிய கரு.நாகராஜன்.

ஆனால் இந்துக்களின் இயல்பு அது அல்ல, எப்போதும் சகோதரத்துவத்தின் பக்கம் நிற்பது தான் இந்துக்களின் பண்பு. நாட்டை பிளவுபடுத்துபவர்கள், பிரிவினை சக்திகளிடமிருந்துதான் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருகிறது. ஆர்எஸ்எஸ் தான் சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், மக்களை ஒருவருக்கு ஒருவர் சண்டையிட தூண்டுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. சிறுபான்மையினரை ஆபத்தில் ஆழ்த்துவது ஆர்எஸ்எஸ் அல்லது இந்துக்களின் இயல்பு அல்ல. சகோதரத்துவத்தின் பக்கம் நிற்பது தான் என அவர் பேசியிருந்தார்.

Caste and Varna should be abandoned..these should be considered as a thing of the past..RSS leader Mohan Bhagwat.

இந்நிலையில் நாக்பூரில் டாக்டர் மதன் குல்கர்னி மற்றும் டாக்டர் ரேணுகா பொகாரே எழுதிய "வஜ்ர சுச்சி துங்க்"  என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார் அவர்,  அப்புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார். அதில்,  சமூக சமத்துவம் என்பது இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.

இதையும் படியுங்கள்: என் தாத்தாவை விட எங்க அப்பா ரொம்ப டேஞ்சர்.. ப்ளாஸ்பேக்கை கூறி பாஜகவுக்கு பயம் காட்டும் உதயநிதி..!

ஆனால் காலப்போக்கில் அது மறக்கடிக்கப்பட்டுள்ளது. இதுவே மோசமான விளைவுகளுக்கு வழிவகுத்திருக்கிறது. வர்ண மற்றும் சாதி  அமைப்பால் ஆரம்பத்தில் எந்த பாகுபாடும் இல்லை, அதனால் அதிக பயன்பாடுகள்தான் இருந்தன. ஆனால் இன்று இது குறித்து யாராவது கேட்டால் அது கடந்த காலம் என கூறி கடந்துசெ செல்ல வேண்டும்.

சமூகத்தின் நலனுக்காக சிந்திக்கும் ஒவ்வொருவரும் வர்ணம் மற்றும் ஜாதி அமைப்பு என்பது காலம் கடந்த ஒரு விஷயம் என்று கூறவேண்டும், வர்ணம் சாதிகள் முற்றிலும்  கைவிடப்பட வேண்டும்,  முந்தைய தலைமுறையினர் எல்லா இடங்களிலும் தவறு செய்திருக்கிறார்கள், அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

Caste and Varna should be abandoned..these should be considered as a thing of the past..RSS leader Mohan Bhagwat.

அந்த தவறுகளை நாம் ஏற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை, நம் முன்னோர்கள் செய்த தவறுகளை ஏற்றுக் கொள்வதால் நாம் தாழ்ந்தவர்கள் ஆகிவிடுவதில்லை, அப்படி யாராவது நினைத்தால் அது நடக்காது, ஏனென்றால் அனைவரின் முன்னோர்களும் தவறு செய்திருக்கிறார்கள், எனவே சாதி, வர்ணம் அனைத்தும் கைவிடப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios