அதிமுக வேஸ்ட்.. பாஜகதான் ரியல் எதிர்க்கட்சி.. எடப்பாடி பழனிச்சாமியை அடித்து தூக்கிய கரு.நாகராஜன்.

அதிமுக எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை  என்றும்,  மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வருவதன் மூலம் பாஜகவே சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

AIADMK is a complete waste.. BJP is the real opposition.. Karu Nagarajan who Criticized Edappadi Palaniswami.

அதிமுக எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை  என்றும்,  மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வருவதன் மூலம் பாஜகவே சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். திமுகவை விரட்டுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அதிலும் அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் என அனைவரும் கரம் கோர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

AIADMK is a complete waste.. BJP is the real opposition.. Karu Nagarajan who Criticized Edappadi Palaniswami.

சென்னையை அடுத்த ஆலந்தூரில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட கட்சி சார்பில் சக்தி கேந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- வரும் 9 ஆம் தேதி மண்டல ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது,  13-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து திரும்பும் அண்ணாமலைக்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதிமுக என்பது எதிர்க்கட்சி ஆகவே செயல்படவில்லை,  ஆனால் அவர்களை விடப் பன்மடங்கு எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் பாஜக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு  அணை விவகாரம், என எதிலும் மாநில உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என பாஜக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. தமிழகத்தின் பிரதான கட்சியாக அதிமுக இருந்தாலும், மக்களுக்கு குரல் கொடுப்பதில் பாஜக அதற்கு இணையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே பாஜகவே சிறந்த எதிர்க்கட்சியாக உள்ளது. 

AIADMK is a complete waste.. BJP is the real opposition.. Karu Nagarajan who Criticized Edappadi Palaniswami.

திராவிட மாடல் ஆட்சி என கூறி மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும். திருமாவளவனுக்கு பாஜகவை எதிர்ப்பதுதான் வேலை, தூங்கி எழுந்ததும் பாஜகவை எத்தனை முறை திட்டுவது என்பதில் அவர் குறியாக இருந்து வருகிறார். வெற்றிமாறன்  சினிமா படம் எடுப்பதை விட்டுவிட்டு திமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் வக்காலத்து வாங்குவது சரியா? மணிரத்தினம் ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறார் அதை அனைவரும் பாராட்ட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios