என் தாத்தாவை விட எங்க அப்பா ரொம்ப டேஞ்சர்.. ப்ளாஸ்பேக்கை கூறி பாஜகவுக்கு பயம் காட்டும் உதயநிதி..!
திமுகவின் போர்க்குணம் குறைந்து விடவில்லை. அது என்றைக்கும் குறையாது. மத்திய அரசால் பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலோ அல்லது தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டாலோ திமுகவின் போர்க்குணம் கண்டிப்பாக வெளிவரும் என உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.
எதிர்க்கட்சியை சேர்ந்த பாஜகவினரே, கருணாநிதியை விடவும் மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறி ஒப்புதல் கொடுத்து விட்டார்கள். இது மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான் எனும், நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், திருவல்லிக்கேணி எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நூலை வெளியிட, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதையும் படிங்க;- ஓட்டு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசும் ஸ்டாலின்.. முதலில் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுங்க.. VP.துரைசாமி
இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்;- பெரியார், அண்ணா, கலைஞர் மாடல்களின் கலவையாக தற்போது மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை கொடுத்து வருகிறார். அதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த பாஜகவினரே, கருணாநிதியை விடவும் மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறி ஒப்புதல் கொடுத்து விட்டார்கள். இது மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு.
அடுத்த முறையும் திமுக தான் ஆட்சி அமைக்கப் போகிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது. மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் நல்லாட்சியையும், நல்ல திட்டங்களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதற்கு அனைவரும் உதவ வேண்டும். திமுகவின் போர்க்குணம் குறைந்து விடவில்லை. அது என்றைக்கும் குறையாது. மத்திய அரசால் பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலோ அல்லது தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டாலோ திமுகவின் போர்க்குணம் கண்டிப்பாக வெளிவரும் என உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க;- இந்துக்கள் அடித்து கொண்டு சாக வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா? திருமாவுக்கு எதிராக திமிரும் பாஜக..!