அரியானாவில் கடும் பனிமூட்டம் காரணமாக இரண்டு சொகுசு கார்கள் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரியானா மாநிலம் அம்பாலா-சண்டீகர் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நிலவிய கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு சொகுசு கார்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்கள் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பனிமூட்டத்தால் எதிரில் வாகனம் வருவது தெரியாமல் இரண்டு கார்களும் மோதிக் கொண்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் சண்டீகரைச் சேர்ந்தவர்களாவர் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் இதேபோல் நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.