Asianet News TamilAsianet News Tamil

வெறும் வயிற்றில் மல்டிவைட்டமின் மாத்திரைகளை எடுக்கலாமா? நிபுணர்கள் விளக்கம்..

நீங்கள் ஏதேனும் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டுமா என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்த ஒரு விரிவான மதிப்பீட்டிற்கு ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 

Can we take multivitamin tablets on an empty stomach? Experts explain..
Author
First Published Jul 22, 2023, 12:06 PM IST

நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நம் உணவில் இருந்தே பெறுகிறோம். இருப்பினும் சிலருக்கு ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அவர்களுக்கு மல்டி வைட்டமின் என்று கருதப்படும் கூடுதல் சப்ளிமெண்ட்கள் தேவைப்படுகிறது. ஆனால் நாம் நினைப்பது போல அனைவருக்கும் மல்டிவைட்டமின்கள் தேவையில்லை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  

நீங்கள் ஒரு மல்டிவைட்டமின் எடுத்துக் கொண்டால், எல்லா பிரச்சனைகளும் நீங்காது, குறிப்பாக உங்களுக்கு செரிமானம், ஹார்மோன் அல்லது வேறு ஏதேனும் மருத்துவ பிரச்சினைகள் இருந்தால். இதுபோன்ற சப்ளிமென்ட், சரியான விளைவைப் பெற உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு போன்ற பிற நடவடிக்கைகளுடன் கைகோர்க்க வேண்டும்.

குழந்தைகளிடையே அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டியவை என்ன?

நீங்கள் ஏதேனும் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டுமா என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்த ஒரு விரிவான மதிப்பீட்டிற்கு ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது உங்கள் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் மல்டிவைட்டமின் தேவையா என்பதையும், தேவைப்பட்டால் ரத்தப் பரிசோதனைகள் தேவையா என்பதையும் அவர்கள் வழிகாட்ட முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் உணவில் சப்ளிமெண்ட்ஸ் தேவை என்பதை நீங்கள் தீர்மானித்தவுடன், அவற்றை வெறும் வயிற்றில் எடுக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்வது அவசியம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த மல்டிவைட்டமின்களை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது?

இரண்டு வகையான வைட்டமின்கள் உள்ளன: கொழுப்பில் கரையக்கூடியது மற்றும் நீரில் கரையக்கூடியது. நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான B மற்றும் C பொதுவாக வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது, அவை அதிக அளவு இருக்கும் போது தவிர, சில நபர்களுக்கு செரிமான பிரச்சனைகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது.

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E, K போன்றவை சில உணவுக் கொழுப்புடன் எடுத்துக் கொள்ளும்போது சிறப்பாக உறிஞ்சப்படுகிறது.  எனவே அவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது அவற்றின் உறிஞ்சுதலைத் தடுக்கலாம். எனவே, அவற்றை பொதுவாக உணவுடன் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், இல்லையெனில் அது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.

இரும்புச்சத்து வெறும் வயிற்றில் நன்றாக உறிஞ்சப்பட்டாலும், இரும்புச்சத்து கொண்ட மல்டிவைட்டமின்களை உணவுடன் எடுத்துக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வெற்று வயிற்றில் இரும்புச் சத்துக்களை உட்கொள்வது குமட்டல், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்," என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் இரும்புச் சத்துக்களிலிருந்து தனித்தனியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று உறிஞ்சுதலில் தலையிடலாம். உங்கள் வயது, பாலினம், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மருந்தளவு இருக்கும்.

மல்டிவைட்டமின்களுக்கான சரியான அளவு என்ன?

மல்வி வைட்டமின்களுக்கான அளவு உங்கள் வயது, பாலினம், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது, எனவே அதைத் தீர்மானிப்பதற்கு முன்பு ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது முக்கியமானது. நீங்கள் சிறந்த ஆரோக்கியம் மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகள் இல்லாத ஒருவராக இருந்தால், உணவுக்குப் பிறகு ஒரு மல்டிவைட்டமின் மாத்திரையை சாப்பிடுமாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஞாபக சக்தியை அதிகரிக்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?

Follow Us:
Download App:
  • android
  • ios