Asianet News TamilAsianet News Tamil

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

By election date announcement for 6 states including UP Bihar Maharashtra
Author
First Published Oct 3, 2022, 5:30 PM IST

6 மாதங்களில் நடைபெறும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் நவம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

By election date announcement for 6 states including UP Bihar Maharashtra

இதையும் படிங்க..ஆஃபர் லெட்டரை ரத்து செய்யும் விப்ரோ, இன்ஃபோசிஸ் & டெக் மஹிந்திரா.! அதிர்ச்சியில் ஐ.டி இளைஞர்கள் !!

மகாராஷ்டிரா, பீகார், அரியானா, தெலுங்கனா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அந்தேரி கிழக்கு (மகாராஷ்டிரா), மோகமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (ஹரியானா), முனுகோட் (தெலுங்கானா), கோலா கோத்ரநாத் (உத்தரபிரதேசம்) மற்றும் தாம்நகர் (ஒடிசா) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்

By election date announcement for 6 states including UP Bihar Maharashtra

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 14 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை திரும்பப்பெறும் நாள் அக்டோபர் 17 ஆம் தேதியும், நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் நவம்பர் 6 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..உட்கட்சியில் உள்குத்து.! கோபத்தில் ஆக்சனில் இறங்கிய ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் டூ அமைச்சர்கள் ஷாக் !

Follow Us:
Download App:
  • android
  • ios