எவ்வளவு சொல்லியும் கேட்கல.. மணமேடையில் வரம்புமீறிய மணமகன் - அடுத்த நொடியே விவாகரத்து கேட்ட பெண்!

திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஒரு அழகிய தருணம், ஆனால் அந்த இனிமையான நேரத்தில் தனக்கு பிடிக்காது என்று தெரிந்து, அதே செயலை செய்த ஒரு மணமகனால், அந்த மணப்பெண் திருமணமான சில நொடிகளில் தனக்கு விவகாரித்து வேண்டும் என்று கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bride Cancelled the marriage and seeks for divorce after the grooms disrespectful behaviour

இந்த சம்பவம் சரியாக எந்த இடத்தில் நடந்தது என்பது குறித்த தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஒரு மணப்பெண் தனது காதலரை கரம் பிடிக்க போகிறோம் என்று சந்தோஷத்தில் மணமேடை ஏறி உள்ளார் ஆனால் அப்பொழுது மேடையில் தனக்கு பிடிக்காது என்று ஏற்கனவே கூறிய ஒரு செயலில் அந்த மணமகன் ஈடுபட்டதால் மேடையிலேயே, தனக்கு திருமணமான சில நொடிகளில் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறியுள்ளார் அந்த பெண். 

கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார் அந்த காதலன். அந்த காதலை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண் தனது சுயமரியாதைக்கு எந்த விதத்திலும் தீங்கு வராத வண்ணம் நம்முடைய காதல் வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்று கூற அதை ஏற்றுக்கொண்டு சுமார் மூன்று ஆண்டுகளாக நல்ல முறையில் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். 

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இறுதியில் இந்த காதல் திருமணம் என்ற பந்தத்தில் சென்று முடிய மணமகளும் மணமகளும் தங்கள் திருமண நாளை எண்ணி நித்தமும் சந்தோஷத்துடன் காத்திருந்தனர். தாங்கள் காதலோடு பழகிய காலத்திலேயே தனக்கு இருக்கும் சில பயங்களையும், குறிப்பாக திருமண மேடையில் நடக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார் அந்த மணப்பெண். அதில் ஒன்றுதான் திருமண மேடையில் தம்பதிகள் இருவரும் கேக் வெட்டும் பொழுது அந்த கேக்கில் தன் முகத்தை அழுத்த கூடாது என்ற நிபந்தனை.

ஆனால் மணமகன் அந்த பெண்ணின் பேச்சை மீறி மணமேடையில் சடங்குகள் முடிந்த பிறகு கேக் வெட்டும் நிகழ்வின் போது அந்த மணமகளின் தலையின் பின்புறத்தை பிடித்து வேகமாக அந்த கேக்கிற்குள் அழுத்தியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியும் மன வேதனை அடைந்த அந்த பெண் மேடையிலேயே, தனக்கு திருமணம் ஆனா சில நிமிடங்களில் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறி அங்கிருந்த புறப்பட்டு சென்றுள்ளார்.

அவருடைய சொந்தங்களும், பெற்றோர்களும், மாப்பிள்ளை வீட்டாரும் அவரிடம் எவ்வளவு பேசியும் அவர் இறுதிவரை மீண்டும் அந்த இளைஞனுடன் வாழ ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தனது நடந்த ஒரு விபத்தால் சில மன அழுத்தங்களை அவர் எதிர்கொண்டு வருவதாகவும், இந்நிலையில் தனது காதலும் தான் எவ்வளவோ கூறியும் அதே செயலை பலருக்கு முன்னால் மேடையில் செய்தது தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறி தனது திருமணத்தை முறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொபைல் தயாரிப்பில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்.. அசத்தும் Make In India திட்டம் - வெளியான மாஸ் ரிப்போர்ட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios