பைக் அலாரத்திற்கு தகுந்தார் போல் சிறுவன் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதனை பிரபல இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவும் கண்டு ரசித்துள்ளார். 

பைக் அலாரத்திற்கு தகுந்தார் போல் சிறுவன் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதனை பிரபல இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவும் கண்டு ரசித்துள்ளார். தினந்தோறும் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் வரும் அந்த சிறுவன் பைக்கில் இருக்கும் தெப்ட் அலாரம் எனப்படும் திருட்டு தடுப்பு அலாரத்திற்கு தகுந்தார் போல் நடனமாடுகிறார்.

இதையும் படிங்க: காற்றில் சரிந்த ராட்சத விளம்பர பலகை: 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி

அது பார்ப்பதற்கு நகைச்சுவையாக உள்ளதால் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை பிரபல இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவும் கண்டு ரசித்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பகிர்ந்து தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பீகாரில் சட்டவிரோத மணல் குவாரியை ஆய்வு செய்த பெண் அதிகாரி மீது தாக்குதல்... வெளியான அதிர்ச்சி வீடியோ!!

அவரது டிவிட்டர் பதிவில், சிறுவனின் நடனத்தை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த சிறந்த வீடியோ. நான் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். என் வார இறுதி ஆரம்பமாகிவிட்டது என்று வேடிக்கையாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை சுமார் 14.5K பயனர்கள் ரீ-ட்விட் செய்துள்ளனர். மேலும், 60.7K பயனர்கள் லைக் செய்துள்ளனர்.

Scroll to load tweet…