பீகாரில் சட்டவிரோத மணல் குவாரியை அய்வு செய்த பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பீகாரில் சட்டவிரோத மணல் குவாரியை அய்வு செய்த பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பிஹ்தா நகரில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வந்துள்ளது. இதை அறிந்த பெண் அதிகாரி அங்கு ஆய்வு செய்ததாக தெரிகிறது. அப்போது அந்த மணல் குவாரியை சேர்ந்தவர்கள் அந்த பெண் அதிகாரியை இழுத்துச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 100வது ஜி20 செயற்குழுக் கூட்டம் வாரணாசியில் இன்று தொடக்கம்

அதே நேரத்தில், 3 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்: பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அந்த வீடியோவில், ஒரு பெரிய கும்பல் பெண் அதிகாரி மீது கற்களை வீசுவதை காணலாம். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் படம் எடுப்பதையும் பெண் அதிகாரி உயிரைக் காப்பாற்ற ஓடுவதைக் காண முடிந்தது. வீடியோ பதிவு செய்த நபர் கூட்டத்தைத் தொடர்ந்து பெண் அதிகாரியை அடைந்தபோது, ​​ஒருவர் பெண் அதிகாரியை இழுத்துச் சென்று தாக்குவதை காணலாம். இந்த வீடியோ கண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.