புனேயில் மிகப்பெரிய இரும்பு விளம்பரப் பதாகை காற்றில் சரிந்ததில் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் டவுன்ஷிப் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் இன்று (திங்கள்கிழமை) மாலை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் இருந்த இரும்பினால் ஆன ராட்சத விளம்பரப் பதாகை கீழே சரிந்தது.

அந்த சமயத்தில் விளம்பரப் பதாகையின் கீழ் இருந்த ஐந்து பேர் உடல் நசுங்கி இறந்தனர். இறந்தவர்களில் 4 பேர் பெண்கள். மேலும் இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். மும்பை - புனே நெடுஞ்சாலையில் ராவெட் கிவாலே பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்பூப்பந்தாடி தெரியுமா? சுற்றுலா ஏஜென்சி தொடங்கி சாதித்த சஜ்னா

"பலத்த காற்று காரணமாக சிலர் அந்த இரும்பு விளம்பரப் பதாகையின் அடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது திடீரென்று, பிரம்மாண்ட விளம்பரப் பதாகை அப்படியே கீழே சரிந்து நின்றிருந்தவர்கள் மேல் விழுந்திருக்கிறது. இதில் ஐந்து பேர் பலியாகிவிட்டனர். இன்னும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்." என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார்.

காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

WhatsApp Job Scam: உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்திருக்கா? அப்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!