கர்நாடகாவில் பரபரப்பு.!! பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் கம்மர் வெட்டிக் கொலை.!
கர்நாடக மாநிலம் தார்வாட்டில் பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் கம்மர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) இளைஞர் மோர்ச்சா தலைவர் பிரவீன் கம்மர் கர்நாடக மாநிலம் தார்வாட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குடிபோதையில் தனிப்பட்ட காரணங்களுக்காக கம்மாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குடிபோதையில் தனிப்பட்ட காரணங்களுக்காக கம்மாரை தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பரபரப்பு தகவலை கூறியுள்ளார் தெற்கு பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா.
இதுகுறித்து பேசிய அவர், “தார்வாட் பாஜக யுவமோர்ச்சா செயற்குழு உறுப்பினரும், குட்டூர் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவருமான பிரவீன் கம்மர் கொலை செய்யப்பட்டது திட்டமிட்ட ஒன்றாகும். அவரது அரசியல் எதிரிகளால் இது நடத்தப்பட்டிருக்கிறது. கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தேஜஸ்வி சூர்யா.
பிரவீன் கம்மர் நேற்று இரவு அரசியல் எதிரிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கர்நாடகாவில் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜகவை சேர்ந்தவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..பள்ளியில் டீன் ஏஜ் மாணவர்களுடன் உடலுறவு - சேட்டை செய்த 6 பெண் ஆசிரியர்கள்
இதையும் படிங்க..400 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரகணம்.. எங்கு, எப்போது காணலாம் - முழு விபரம்