Solar Eclipse 2023 : 400 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணம்...! - முழு விபரம்

Solar Eclipse 2023  | நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய அரிய கிரகணம் ஆகும். அதை எங்கு, எப்போது, யாரெல்லாம் காண முடியும் என்பதை இங்கு காணலாம்.

Ningaloo hybrid solar eclipse in April: Where, when, and how to watch

நிங்கலூ கிரகணம் (Ningaloo Eclipse) என்று அழைக்கப்படும் ஹைபிரிட் சூரிய கிரகணம் (ஏப்ரல் 20) நாளை நிகழ உள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நிங்கலூ கிரகணம் ஹைபிரிட் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன், முழு கிரகணமாக மாறும் என்று கூறப்படுகிறது. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காது என்றும், அதற்கு பதிலாக, அது சூரியன் மீது ஒரு சிறிய இருண்ட வட்டு போல் தோன்றும் என்றும் கூறப்படுகிறது. 

Ningaloo hybrid solar eclipse in April: Where, when, and how to watch

இதனை இந்தியாவில் காண முடியாது. இந்த நிங்கலூ ஹைபிரிட்சூரிய கிரகணம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய அரிய கிரகணம் ஆகும். ஆஸ்திரேலியாவின் வட மேற்கு எக்‌ஷ்மவுத் கல்ஃப் எனும் நிங்கலூ பகுதி. இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பெயரிடப்பட்டுள்ள கடற்பரப்பைச் சுற்றியுள்ள பகுதிகளை நிங்கலூ பகுதி என குறிப்பிடப்படுகிறது.

இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

Ningaloo hybrid solar eclipse in April: Where, when, and how to watch

இந்த பகுதியில் ஏப்ரல் 20ல் நிகழும் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என்பதால் இந்த கிரகணத்திற்கு நிங்கலூ சூரிய கிரகணம் என்று பெயர் வந்துள்ளது. வரும் ​​ஏப்ரல் 20 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.34 முதல் 6.32 வரை கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்களுக்கு பகுதி சூரிய கிரகணம் ஏற்படும். 

இதையும் படிங்க..ஏப்ரல் 18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் உள்ளே!!

Ningaloo hybrid solar eclipse in April: Where, when, and how to watch

அந்த நேரத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு 4.29 முதல் 4.30 வரை முழு கிரகணம் தெரியும். தென்கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இருந்தால் பகுதி அளவு கிரகணத்தை காண முடியும் என்று முன்னாள் நாசா வானியல் இயற்பியலாளரும் கிரகண நிபுணருமான பிரெட் எஸ்பெனாக் கூறுகிறார்.

இதையும் படிங்க..பள்ளியில் டீன் ஏஜ் மாணவர்களுடன் உடலுறவு - சேட்டை செய்த 6 பெண் ஆசிரியர்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios