ராகுல் காந்தி இந்த தேசத்துக்கே அவமானம். அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்க மல்லிகார்ஜூன கார்கே நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

ராகுல் காந்தி இந்த தேசத்துக்கே அவமானம். அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்க மல்லிகார்ஜூன கார்கே நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தானில், பாரத் ஜோடோ நடைபயணத்தில் உள்ளார். ராகுல் காந்தி நேற்று ஊடகத்தினர் சந்திப்பில் “ சீனா போருக்குத் தயாராகி வருகிறது, அந்த அச்சுறுத்தலை பாஜக அரசு நிராகரித்து, கண்டுகொள்ளாமல் இரு்க்கிறது.

தூங்கிக் கொண்டிருக்கநேருவின் இந்தியாஅல்ல!இது மோடியின் புதிய இந்தியா!:ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

 சூழலை ஏற்காமல் பாஜக அரசு தூங்குகிறது.இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்துகிறார்கள்”எனத் தெரிவித்திருந்தார்

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக தரப்பில் தொடர்ந்து கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்தன. பாஜக செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் “ காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படாத தலைவராக இருந்தால், தேசத்தின்நலனுக்காக காங்கிரஸ்கட்சி துணையாக இருக்கும் என்றால், முதலில் ராகுல் காந்தி பேசிய வார்த்தைகளுக்காக அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்துநீக்குங்கள். இந்திய ராணுவத்தின் வீரத்தை குறைத்து மதிப்பிட்டு, அவர்களின் தார்மீக துணிச்சலை குலைக்கிறார். 

சீனா போருக்கு ரெடி.. இந்திய அரசோ தூங்குகிறது.! பாஜகவை அட்டாக் செய்த ராகுல் காந்தி

ராகுல் காந்திக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால், ராகுல் காந்திதான் கட்சியை வழிநடத்துகிறார், அவரின் மனநிலைதான், வார்த்தைதான் கட்சியின் மனநிலை என எடுக்க வேண்டியதிருக்கும். காங்கிரஸ் கட்சி அரசியல் கட்சி என்றநிலையில் இருந்து குறைந்து, தேசத்துக்கு எதிராக செயல்கள் கொண்டவர்கள் இடமாக மாறிவிட்டது” எனத் தெரிவி்த்தார்.

Scroll to load tweet…

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்திய ராணுவத்தை மட்டும் ராகுல் காந்தி அவமதிக்கவில்லை, தேசத்தின் தோற்றத்தையே அவமதித்துவிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ராகுல் காந்தி பிரச்சினையில்லை, தேசத்துக்கே மிகப்பெரிய அவமானமாக ராகுல் காந்தி இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.