India China:தூங்கிக் கொண்டிருக்கநேருவின் இந்தியாஅல்ல!இது மோடியின் புதிய இந்தியா!:ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி
1962ம் ஆண்டு நேருவின் கீழ் இருந்த இந்தியா இதுவல்ல. இது பிரதமர் மோடியின் புதிய இந்தியா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
1962ம் ஆண்டு நேருவின் கீழ் இருந்த இந்தியா இதுவல்ல. இது பிரதமர் மோடியின் புதிய இந்தியா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
சீனா இந்தியாவை போருக்கு அழைக்கிறது. இந்திய அரசு தூங்குகிறது என்று ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
சீனா போருக்கு ரெடி.. இந்திய அரசோ தூங்குகிறது.! பாஜகவை அட்டாக் செய்த ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டியில் “ சீனாவின் மிரட்டலை அச்சுறுத்தலை தெளிவாகப் பார்க்கிறேன். கடந்த 2 அல்லுத 3 ஆண்டுகளாக சீனாவின் இந்த மிரட்டல் தொடர்ந்து வருகிறது, ஆனால், மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து, மறைத்து வருகிறது.இந்த மிரட்டல் கண்டுகொள்ளப்படாமல் இருந்திருக்கலாம் அல்லதுமறைக்கப்பட்டிருக்கலாம்.அருணாச்சலப்பிரதேசம், லடாக் பகுதியில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள சீனா தயாராகிவருகிறது,
இந்திய அரசு தூங்குகிறது. சீனா போருக்கு தயாராகிறது என்பதை மத்திய அரசு கேட்கத் தயாராகஇல்லை, ஆனால், சீனா போருக்குத் தயாராகிவருகிறது. ஊருடுவல் அல்ல, போர். சீன ராணுவத்தின் ஆயுதங்கள் மாதிரியைப் பாருங்கள், அவர்கள் போருக்காகத் தயாராகி வருகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக சார்பில் பதிலடி தரப்பட்டது. பாஜக செய்தித்தொடர்பாளர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் அளித்த பேட்டியில் “ ராகுல் காந்தி தனது பேட்டியி்ல சீனாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறார். சீனாவிடம் அதிகம் நெருக்கம் காட்டினால் என்ன நடக்கும் என்று ராகுல் காந்திக்கு நன்கு தெரியும். அவரின் கொள்ளுதாத்தா நேருவின் ஆட்சியில்தான் நிலப்பகுதிகளை இழந்தோம்
ராகுல் காந்தி தனது நடைபயணத்தின்போது, இதுபோன்று இந்திய பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து தவறான செய்திகளைப் பரப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார், இந்திய வீரர்களின் தார்மீக துணிச்சலை குலைக்கிறார். இப்போதிருக்கும் தூங்கிக்கொண்டிருக்கும் இந்தியா அலல், கடந்த 1962ம் ஆண்டில் சீனாவிடம் 37,242 சதுரகி.மீ இழந்த நேருவின் இந்தியா அல்ல, இது பிரதமர் மோடியின் புதிய இந்தியா.
ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாப்பு குறித்து பொறுப்பற்ற முறையில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்
பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “சீன வீரர்களை அடித்து நொறுக்கும் இந்திய வீரர்களின் செயல்களைப் பார்த்து இந்தியவீரர்களின் வீரத்தை எப்போதுமே சந்தேகப்படும் ராகுல் காந்தியைத் தவிர, இந்தியர் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு ராகுல் காந்தியின் குடும்பத்தினர் நடத்தும் ஆர்ஜி அறக்கட்டளை சீனாவின் நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.