மேற்கு வங்க மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை காவல்துறையினர் நடுரோட்டில் அலங்கோலமாக இழுத்துச் செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் கலியாகுஞ்சில் தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் மேற்கு வங்க அரசாங்கத்தை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக சாடுகிறது.

பாஜக எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர் என அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டுகிறார். மேலும், இவ்வாறுதான் காவல்துறை ஆதாரங்களை நீர்த்துப்போகச் செய்வதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை பார்க்க பாஜக எம்எல்ஏக்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களை வலுக்கட்டயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தனர். பாதிக்கப்பட்டவரின் உடலை கண்ணியமற்ற முறையில் இழுத்துச் செல்லும் மேற்கு வங்க காவல்துறை, தகவல்களை மறைத்து ஆதாரங்களை நீர்த்துப்போக வைக்க, வேறு எப்படி நடந்துகொள்ளும்" என்று எழுதியுள்ளார்.

Mann Ki Baat : தமிழ்நாடு, தமிழ் மொழி பற்றி பிரதமர் மோடி இத்தனை விஷயம் சொல்லிருக்காரா..?

Scroll to load tweet…

மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் தலித் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை, காணாமல் போன சிறுமியின் உடலை உள்ளூர்வாசிகள் கண்டுபிடித்தனர். அவருக்கு நீதி கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"கலியகஞ்சில் பலியானவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர். வியாழன் இரவு முதல் ஒரு பெண் காணாமல் போனதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அனைத்து ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் சோதனை நடத்தத் தொடங்கினோம். பின்னர், கைலியாகஞ்சில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என தினாஜ்பூர் எஸ்பி சனா அக்தர் சொல்கிறார்.

இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி அடித்தனர். "முக்கிய ஆதாரங்கள் இழக்கப்படாமல் இருக்க, முன்கூட்டியே பிரேத பரிசோதனையை செய்யவேண்டும் என்பதால், பாதிக்கப்பட்டவரின் உடலை அவர்களிடம் இருந்து மீட்க, போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்க மருத்துவ குழுவையும் அமைத்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என எஸ்பி அக்தர் மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை அனுப்புவதாகக் கூறியுள்ளது. மாநில தலைமைச் செயலாளர் மற்றும் வடக்கு தினாஜ்பூர் கலெக்டர் இருவரும் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவித்த போதிலும் விவரமாக பதில் அளிக்கவில்லை எனவும் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

கோடிகளில் புரளும் பாஜகவினர்..2019ல் ஆட்சியை கவிழ்த்த MLAக்கள் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு.!!