ராஜஸ்தானில் தீ விபத்தை செல்பி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ, பொதுமக்கள் விமர்சித்ததால் அதனை நீக்கினார்.

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல குடியிருப்பு பகுதிகள் தீயில் எரிந்து நாசமாயின.

அந்த  இடத்திற்கு விரைந்து வந்த பாஜக எம்.எல்.ஏ பச்சுசூ சிங், தீயில் எரிந்து கொண்டிருந்த குடியிருப்பு பகுதிகளில் நின்று கொண்டு மக்களோடு மக்களாக நின்று செல்பி எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவிட்டார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இது செல்பி எடுக்க .வேண்டிய நேரமா? என்றும், எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க 2 பக்கெட் நீரை எம்.எல்.ஏ ஊற்றி இருக்கலாம் என விமர்சனம் செய்தனர்.

இதனை அறிந்த எம்.எல்.ஏ பச்சூ சிங் உடனடியாக பேஸ்புக் பதிவில் இருந்து புகைப்படைத்தை நீக்கி விட்டார். இவர் பயணா தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இது குறித்து எம்.எல்.ஏ. விடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர் “அரசு அதிகாரிகளுக்கு சம்பவ இடத்தில் நான் இருக்கிறேன் என்று தெரியபடுத்துவதற்காக பதிவிட்டு இருந்தேன். அவர்கள் என் அழைப்பை எடுக்கவில்லை’’ இவ்வாறு அவர் கூறினார்.