திரிபுரா சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக முன்னிலை..! பஞ்சாப் மக்களைவை தேர்தலில் ஷிரோமனி அகாலிதளம் முன்னிலை

ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 3 மக்களவை தொகுதிக்கும், 7 சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திரிபுராவில் நடைபெற்ற 4 சட்ட மன்ற இடைத்தேர்தலில் பாஜக 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

BJP leads in Tripura Assembly by election Shiromani Akali Dal leads Punjab in elections

இடைத்தேர்தல் பாஜக முன்னிலை

டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில் திரிபுராவின் நான்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் அகர்தலா, டவுன் போர்டோவாலி, சுர்மா மற்றும் ஜுப்ராஜ்நகர்  78.58% வாக்குகள் பதிவாகியுள்ளன, வாக்குப்பதிவின் போது ஆளும் கட்சி தொண்டர்களால் வன்முறை தூண்டப்பட்டதாகக் கூறி பல வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கோரின. ஆனால், பாஜக இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்தது. முதல்வர் மாணிக் சாஹா ஒரு முக்கிய வேட்பாளராக உள்ளார். பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தங்கள் வேட்பாளர்களை நான்கிலும் போட்டியிட வைத்துள்ளன. இந்த நிலையில், வாக்குகள் பிரிந்து பாஜகவிற்கு சாதகமாகும் அமையும் என ஏற்கனவே கூறப்பட்டது. அதே போல 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் 3 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 

ஒருபக்கம் பவேரியன் பேண்ட்.. மறுபக்கம் வானவில்.. பிரதமர் மோடிக்கு முனிச்-இல் உற்சாக வரவேற்பு..!

BJP leads in Tripura Assembly by election Shiromani Akali Dal leads Punjab in elections

ஷிரோமனி அகாலிதளம் முன்னிலை

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மாணிக் சாஹா,மலினா டேப்நாத், ஸ்வப்னா தாஸ், ஆகோயிர் முன்னிலை பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதிப் ராய் பர்மன் அகர்தலா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே போல பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஷிரோமனி அகாலிதளம் வேட்பாளர் சிம்ரன்ஜித் சில் மான் முன்னிலையில் உள்ளார்.  டெல்லி சட்டமன்ற தேல்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.தொடர்ந்து பல்வேறு  மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை; உத்தவ் தாக்கரேவுக்கு முழு அதிகாரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios