ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பின் ஜெர்மனியில் இருந்து ஜூன் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்ய இருக்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜெர்மனி சென்று இருக்கிறார். ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். ஜெர்மனி சென்று அடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முனிச் விமான நிலையத்தில் பவேரியன் பேண்ட் குழு மூலம் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் இருந்து இறங்கும் போதே பவேரியன் பேண்ட் குழுவினர் இசைக்கத் தொடங்கி, உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதை அடுத்து விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி, பவேரியன் பேண்ட் குழு அருகில் நின்றுக் கொண்டு இசையை கேட்டு மகிழ்ந்தார். மேலும் பேண்ட் குழுவினரை பாராட்டும் வகையில், கைகளை தட்டிக் கொண்டே இசையை ரசித்து கேட்டார்.

Scroll to load tweet…

ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள சென்று இருப்பதை அடுத்து பிரதமரை வரவேற்கும் விதமாக பவேரியன் பேண்ட் குழுவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தவிர பிரதமர் மோடிக்கு இயற்கையும் முனிச் நகரில் வரவேற்பை அளித்தது.

பிரதமர் மோடிக்கு வானவில் வரவேற்பு:

முனிச் நகரில் விமானத்தில் இருந்து பிரதமர் மோடி இறங்க ஆயத்தமாகும் போதே, வானில் அழகிய வானவில் தோன்றியது. பவேரியன் குழுவுக்கு முன் இயற்கை முந்திக் கொண்டு பிரதமருக்கு வரவேற்பை அளித்ததை போன்று இந்த காட்சி அமைந்தது. இதே போன்று ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…

ஜெர்மனி சென்று இருக்கும் பிரதமர் மோடி இன்று (ஜூன் 26) மற்றும் நாளை (ஜூன் 27) ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

ஐக்கிய அரபு நாடுகளுக்கும் பயணம்:

ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பின் ஜெர்மனியில் இருந்து ஜூன் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்ய இருக்கிறார். வளைகுடா நாடுகள் அதிபராக இருந்து சமீபத்தில் உயிரிழந்த ஷேக் கலிபா சையத் அல் நயன் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள ஷேக் முகமது பின் சையத் அல் நயனை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திக்க இருக்கிறார். 

பிரதமர் மோடி: ஜெர்மனியில் நடக்கும் 2 நாள் ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு

ஜெர்மனி பயணத்தின் போது நடைபெறும் ஜி7 மாநாட்டில் சுற்றுச் சூழல், எரிவாயு, உணவு பாதுகாப்பு, ஆரோக்கியம், பாலி சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.