அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இன்று நடந்த தேசிய செயற்குழு  கூட்டத்தில் முழு அதிகாரத்தையும் சிவசேனா கட்சித் தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்காரேவுக்கு நிர்வாகிகள் அதிகாரம் வழங்கினர். இந்த நிலையில், 'சிவசேனா பாலசாகேப் தாக்கரே' என்ற பெயரில் புதிய கட்சியை துவங்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான கடிதத்தையும் அதிருப்திஎம்.எல்.ஏக்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருப்பதாகத் தெரிகிறது. 

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இன்று நடந்த தேசிய செயற்குழு
கூட்டத்தில் முழு அதிகாரத்தையும் சிவசேனா கட்சித் தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்காரேவுக்கு 
நிர்வாகிகள் அதிகாரம் வழங்கினர். இந்த நிலையில், 'சிவசேனா பாலசாகேப் தாக்கரே' என்ற பெயரில் புதிய 
கட்சியை துவங்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான கடிதத்தையும் அதிருப்தி
எம்.எல்.ஏக்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருப்பதாகத் தெரிகிறது. 

சிவசேனா கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் உள்பட தன்னிடம் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் 
இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில்தான் இன்று சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 
முன்னாதாக உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று 
ஏக்நாத் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், இதை மகாராஷ்டிரா 
சட்டசபை துணை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

Shiv Sena national Executive meeting: சொந்தக் கட்சியினரே முதுகில் குத்தினர் உத்தவ் தாக்கரே ஆதங்கம் 

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தில் 33 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இவர்கள் துணை சபாநாயகரின் கையில் நேராக சென்று வழங்காமல், இ மெயில் மூலம் அவரது 
அலுவலகத்துக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக 16 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அவர்களுக்கு 
துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர்கள் அனைவரும் வரும் திங்கள் கிழமை நேரில் 
ஆஜராக வேண்டும் என்று துணை சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

காலியாகும் சிவ சேனா கூடாரம்; ஏக்நாத் ஷிண்டேவின் அடுத்த குறி எம்பிக்கள்

அதிருப்தியாளர்களின் செயலால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் இன்று புனேவில் 
இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ., தனாஜி சாவந்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். அசம்பாவித
சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களுக்கு 
போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பையில் பெரிய அளவில் கூட்டம் 
கூடக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையேதான் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டு இருந்த 
போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு உள்ளது என்றும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று 
ஏக்நாத் ஷிண்டே கண்டித்துள்ளார். 


சிவசேனா கட்சி பதிவு செய்யப்பட கட்சி, இந்தக் கட்சியின் தலைவராக உத்தவ் தாக்கரே முறைப்படி தேர்வு 
செய்யப்பட்டு இருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தலைவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்று 
சிவசேனா கட்சியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.