எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாது!: திருச்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு
திமுக ஆட்சி பற்றி கூறிய முதல்வர் ஸ்டாலின் எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சியை நடத்திவருவதாகத் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுக தீவிரமான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் புதன்கிழமை (இன்று) திமுக பயிற்சி பாசறை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சை, திருச்சி உட்பட 15 மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்ற இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
திமுக ஆட்சி பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சியை நடத்திவருவதாக பெருமிதம் தெரிவித்தார். கட்சித் தொண்டர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பணியாற்ற ஊக்கப்படுத்திப் பேசிய அவர், அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர், தினமும் ஒரு மணிநேரம் ஒதுக்கி வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தியுங்கள்; அப்படிச் செய்தால் ஒரு மாதத்தில் அனைத்து வீடுகளுக்கும் சென்றுவிடலாம். என்றார்.
மேலும், "தேவையற்ற பிரச்சனைகளைக் கிளப்பி கட்சிக்குக் கெட்ட பேர் வாங்கிக் கொடுக்க க் கூடாது. சமூக ஊடகங்களை நல்ல தோக்கத்தோடு நல்ல வகையில் பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
ரூ.5,600 கோடி ஊழல்! திமுக ஃபைல்ஸ் 2வது பாகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சமர்ப்பித்த அண்ணாமலை
மத்தியயில் ஆளும் பாஜக அரசை விமர்சித்த அவர், "பாஜக நாட்டின் கட்டமைப்பையே சித்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்களாட்சியை, சமூக நீதி, அரசியலைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் சட்டமன்றமே இருக்காது" என்று சாடினார். பாஜக திமுகவைக் கண்டு அஞ்சுவதாகவும் சாடினார். திமுக மீதான பிரதமர் மோடியின் வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அவர், "நாங்கள் ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுள்" என்று குறிப்பிட்டார்.
அதிமுகவை குறைகூறி பேசிய ஸ்டாலின், அதிமுக பாஜகவின் அடிமையாக இருக்கிறது என்றும் அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி மணிப்பூர் கலவரம் குறித்து பேசவே இல்லை என்றும் குற்றம்சாட்டினார். 'எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி வெல்லும்; அதை 2024 சொல்லும்' என்று கூறி உரையை முடித்தார்.
திருச்சி, தஞ்சாவூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
சவுதி அரச குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கை! அரண்மணைக்குள் என்னவெல்லாம் நடக்குது பாருங்க!