Bill Gates in India: பில்கேட்ஸ் உடன் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சந்திப்பு: AI தொழில்நுட்பம் பற்றி உரையாடல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரைச் சந்தித்து உரையாடினார்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரைச் சந்தித்துப் பேசினார்.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த சந்திப்பின் போது, பில்கேட்ஸ் அமைச்சர் சந்திரசேகருக்கு ‘காலநிலைப் பேரழிவைத் தவிர்ப்பது எப்படி?’ என்ற தனது புத்தகத்தைப் பரிசளித்தார். அதில் ‘எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நன்றி ராஜீவ்’ என்று எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது இந்தியா ஸ்டேக் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றி உரையாடினர். அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தான் இன்டெல் நிறுவனத்தில் பணியாற்றியபோது, பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், லாரி எலிசன் போன்ற தொழில்நுட்பத்துறை ஜாம்பவான்களுடன் கலந்துரையாடிய நாட்களை நினைவுகூர்ந்தார்.
Election Results 2023: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கை தீவிரம்
இந்தச் சந்திப்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்ட பில் கேட்ஸ், "CoWIN, #ABDM மற்றும் #ONDC போன்ற புதுமையான டிஜிட்டல் திட்டங்கள் மூலம் இந்தியா நேர்மறையான மாற்றத்தை உருவாக்குகிறது. சுகாதாரம், விவசாயம் மற்றும் பெண்களின் சக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் அரசின் டிஜிட்டல் திறனை வலுப்படுத்துவது குறித்து ராஜீவுடன் நுட்பமான உரையாடல் மேற்கொண்டேன்" எனக் கூறியுள்ளார்.
பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவரான கேட்ஸ், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவில் முதல் முறையாக சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.
அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 1980 களில் இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்திலிருந்தே பில்கேட்ஸ் உடன் தொடர்பில் இருந்தவர். அரசியலில் நுழைவதற்கு முன்பு, சந்திரசேகர் முப்பது ஆண்டுகளாக தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினார்.
1986ஆம் ஆண்டு சிகாகோவின் இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட்டில் கணினி அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, சந்திரசேகர் பெற்ற முதல் வேலை வாய்ப்பு அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து வந்துதான்.
அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் மூத்த வடிவமைப்பு பொறியாளராகப் பணியாற்றிய பிறகு இந்தியா திரும்பிய சந்திரசேகர், 1994ஆம் ஆண்டு பிபிஎல் (BPL) மொபைல் நிறுவனத்தைத் தொடங்கினார். அது இந்தியாவின் முதல் மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டராகவும் மாறியது.
Assembly Election Results 2023: நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா தேர்தல் முடிவுகள்!!