Asianet News TamilAsianet News Tamil

பில்கிஸ் பானு வழக்கு.. ரத்தான விடுதலை.. 11 குற்றவாளிகளும் மீண்டும் சரண்..

பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேரும், பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரண் அடைந்தனர்.

Bilkis Bano case all convicts surrender in Gujarat after supreme verdict Rya
Author
First Published Jan 22, 2024, 10:08 AM IST

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு ஏற்பட்ட கலவரத்தின் போது 21 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் பில்கிஸ் பானுவின் 3  வயது மகள் உட்பட குடும்பத்தின் 14 உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து குற்றவாளிகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவர்களின் தண்டனை காலம் முடியும் முன்பே நன்னடத்தை அடிப்படையில் குஜராத் அரசு 2022-ம் ஆண்டு விடுதலை செய்தது. குஜராத் அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது.

 

எனக்கும் அழைப்பு வந்துருக்கு.. அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகிறேன்.. நித்தியானந்தா பரபரப்பு ட்வீட்..

குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஜனவரி 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது 11 குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு வழங்கிய விடுதலையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறையில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து 11 குற்றவாளிகளும் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர். குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்த உச்சநீதிமன்றம், ஞாயிற்றுக்கிழமைக்குள் சரணடையுமாறு கூறியிருந்த நிலையில் நேற்று பகாபாய் வோஹானியா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, கோவிந்த் நாய், ஜஸ்வந்த் நாய், மிதேஷ் பட், பிரதீப் மோர்தியா, ராதேஷ்யாம் ஷா, ராஜூபாய் சோனி, ரமேஷ் சந்தனா மற்றும் ஷைலேஷ் பட் ஆகிய 11 குற்றவாளிகளும் சரணடைந்தனர்.

ரயில்வே பயணிகள் கவனத்திற்கு.. ரயில் டிக்கெட் எடுப்பதற்கு முன்பு இதை மறக்காம செய்யுங்க..

முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சில நாட்களுக்குப் பிறகு, குற்றவாளிகள் உடல்நலக்குறைவு, வரவிருக்கும் அறுவை சிகிச்சை, மகனின் திருமணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சரணடைய கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios