எனக்கும் அழைப்பு வந்துருக்கு.. அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகிறேன்.. நித்தியானந்தா பரபரப்பு ட்வீட்..
இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியும், பிரபல சாமியாருமான நித்தியானந்தா அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது பேரு பொருளாகி உள்ளது.
ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8000 விஐபிக்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் அயோத்தி நகர் முழுவதும் மின் விளக்குகளால் ஜொலித்து வரும் நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளப் போவதாக தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கி தற்போது இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கும் நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அவரே கூறியிருந்தார்.
அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவின் நேரடி ஒளிபரப்பை எங்கே, எப்படி பார்ப்பது?
இந்த சூழலில் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இந்த வரலாற்று மற்றும் அசாதாரண நிகழ்வை தவறவிடாதீர்கள். அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த உலகையும் அலங்கரிக்க உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நித்தியானந்த பரமசிவம் இந்த விழாவில் கலந்துகொள்வார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியாயனந்தா கர்நாடகாவின் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். தன்னை தானே கடவுள் என்று அழைத்துக்கொள்ளும் நித்தியானந்தவை உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றனர். அப்போது நித்தியானந்தா பிரபல நடிகை ஒருவருடன் இருக்கும் அந்தரங்க காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு பாலியல் புகார்களும் எழுப்பப்பட்டன.
அந்த வகையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரது ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நித்தியானந்தாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் பின்னர் தலைமறைவாகி விட்டார். இதனிடையே இந்துக்களுக்காக கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கி உள்ளதாகவும் தனது நாட்டை ஐ.நா சபை கூட அங்கீரித்து விட்டது என்றும் நித்தியானந்தா கூறினார்.
ஆனால் அந்த நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து தேடி வரும் நிலையில் அவர் தொடர்ந்து யூ டியூபில் ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். இந்த சூழலில் அவர் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளது பேசு பொருளாகி உள்ளது.
- Ayodhya Ram Mandir Inauguration Live Updates
- Nithyananda to attend Ram Mandir event
- Nithyananda to join PM Modi in Ram Mandir event
- PM Modi in Ayodhya Ram Temple Inauguration
- Ram Mandir
- Ram Mandir Consecration Ceremony
- Ram Mandir Inauguration
- Ram Mandir Inauguration Ceremony
- Ram Mandir Opening Ayodhya
- Ram Mandir Opening Ceremony
- Ram Mandir Photo
- Ram Temple Ayodhya
- Ayodhya Ram Temple
- Ayodhya ram mandir