அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவின் நேரடி ஒளிபரப்பை எங்கே, எப்படி பார்ப்பது?

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவின் நேரடி ஒளிபரப்பை எங்கே, எப்படி பார்ப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Ayodhya Ram Temple Inauguration how to watch live telecast of Ayodhya Ram temple consecration ceremony? Rya

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், ஆசியாவின் பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானி உட்பட 8,000 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மகா கும்பாஷேகத்தின் முக்கிய சடங்குகளை வாரணாசியின் பிரதான பூசாரி லக்ஷ்மி காந்த் தீட்சித் செய்ய உள்ளார்..

இதையொட்டி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். அயோத்தி நகரமே வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது. இன்று காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

பிரதமர் மோடி காலை 10.55 மணிக்கு கோயில் வளாகத்திற்கு வருகை தர உள்ளார். காலை 11.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கும். பின்னர் 12.05 முதல் 12.55 மணிக்குள் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறும். இதைதொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

 

ராமர் கோவில் திறப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு - என்ன கூறியுள்ளார் தெரியுமா?

அதே போல் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். திறப்பு விழா முடிந்த பிறகு நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவின் நேரடி ஒளிபரப்பை எங்கே, எப்படி பார்ப்பது?

நாடு முழுவதும் இந்த சிலை பிரதிஷ்டை விழாவை நேரலையில் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டிடி நியூஸ் மற்றும் டிடி நேஷனல் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். யூ டியூபிலும் அயோத்தி கும்பாபிஷேக விழாவை நேரலையில் பார்க்கலாம். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒட்டுமொத்த நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்கள் மற்றும் தூதரகங்களில் ஒளிபரப்பப்படும். குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, மொரிசியஸ் உள்ளிட்ட 50 நாடுகளில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பப்பட உள்ளது. இதே போல் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி விழா ஒளிபரப்பப்படும். இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் மற்றும் பூத்களிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளாத பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!

முன்னதாக இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 7 நாள் சடங்குகள் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கடந்த வியாழக்கிழமை குழந்தை ராமரின் சிலை கோயில் கருவறைக்குள் வைக்கப்பட்டது. இந்த சிலையை கர்நாடகாவை சேர்ந்த சிற்பி வடிவமைத்திருந்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios