Asianet News TamilAsianet News Tamil

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளாத பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்

BJP national president JP Nadda not to particiapte Ram Temple Consecration Ceremony in ayodhya smp
Author
First Published Jan 21, 2024, 4:30 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வருகிற 22ஆம் தேதி (நாளை) திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். குழந்தை ராமர் சிலை புதிய கோயிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு தனது ஊழியர்கள், நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை விடுத்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2 மணி வரை கோவில் வளாகத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. நண்பகல் 12.30 மணிக்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என தெரிகிறது.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கும்பாபிஷேக தினத்தன்று, அந்தந்த கிராமங்கள், உள்ளாட்சிகள், கோயில்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள், கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் தாம் கலந்து கொள்ளவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். அன்றைய தினம் டெல்லியில் உள்ள கோயிலில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கண்டு களிக்க உள்ளதாகவும், ஜனவரி 22ஆம் தேதிக்கு பின்னர் மற்றொரு நாள் அயோதிக்கு தனது குடும்பத்துடன் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கு தமிழகத்தில் பொது விடுமுறை - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

இதுகுறித்து ஜே.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், “அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் புனித நிகழ்ச்சிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பிற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு பிரம்மாண்டமாக கட்டப்படுள்ள ராமர் கோயிலை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி முடிந்ததும், எனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்காக விரைவில் அயோத்திக்குச் செல்லவுள்ளேன். ஜனவரி 22ஆம் தேதியன்று, டெல்லியில் உள்ள  ஜாண்டேவாலன் கோயிலில் ஒளிபரப்பாகும் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி காணவிருக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

 

 

கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு தேசிய தலைநகர் டெல்லி முழுவதும் உள்ள சுமார் 14,000 கோயில்களிலும் திரையிடப்படும் என்று டெல்லி பாஜகவின் கோயில் பிரிவு தலைவர் கர்னைல் சிங் தெரிவித்துள்ளார். விழாவை நேரலையில் காண ஒவ்வொரு கோயிலிலும் சுமார் 200 பேருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் மொத்தம் 30 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios