அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கு தமிழகத்தில் பொது விடுமுறை - ஓபிஎஸ் வலியுறுத்தல்!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசை முன்னாள் முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் இராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் இராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை (22-01-2024) அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன. இராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், இராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-01-2024 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- Asianet Tamil News
- Ayodhya Latest News
- Ayodhya Ram Mandir News
- Ayodhya Ram Temple Latest News
- Ayodhya Ram Temple News
- Ram Janmbhoomi
- Ram Temple Live Updates
- Spritiual News in Tamil
- ayodhya ram mandir
- ayodhya ram temple
- ayodhya ram temple Pran Pratishtha
- ayodhya ram temple consecration
- ayodhya ram temple public holiday
- o panneerselvam
- ops urges ayodhya ram temple public holiday
- ram temple
- tn govt