96 விஜய் சேதுபதியை போல தேர்வறையில் மயங்கி விழுந்த மாணவன்.. 500 மாணவிகள் நடுவே தேர்வு - அதிர்ச்சி சம்பவம்
தேர்வு அறையில் 500 மாணவிகளுக்கு மத்தியில் இருந்ததால், மாணவர் ஒருவர் பதட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி, கல்லூரி தேர்வுகளில் மாணவர்கள் அதிகமாக காப்பி அடிப்பதற்கு பெயர் பெற்ற மாநிலங்களில் ஒன்று தான் பீகார். பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கி உள்ளன. நேற்று முன்தினம் முதல் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது நிரம்பிய மணிஷ் சங்கர் பிரசாத் என்ற மாணவர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். இவருக்கான தேர்வறை என்பது நாளந்தா அருகே சந்தர்கார்க் பகுதியில் உள்ள பிர்லியண்ட் காண்வென்ட் பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பகுதிக்கு மணிஷ் சங்கர் பிரசாத் தேர்வெழுத சென்றார்.
இதையும் படிங்க..LEO: விஜய்யை துரத்தும் சர்ச்சை!.. தளபதி 67 டைட்டில் லியோ கிளப்பிய சர்ச்சை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!
அங்கு அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.அந்த தேர்வு மையம் முழுவதும் மாணவிகளாகவே இருந்தனர். எந்த மாணவரும் இல்லை. மாணவிகள் மட்டும் சுமார் 500 பேர் வரை அங்கு இருந்தனர்.அதாவது அந்த தேர்வு மையம் முழுவதும் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மணிஷ் சங்கர் பிரசாத்துக்கும் அதுவே கிடைத்துள்ளது.
இதனால் மணிஷ் சங்கர் பிரசாத்துக்கு பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே அவரது தேர்வு அறையில் 50 மாணவிகளுக்கு மத்தியில் தேர்வெழுத அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிக கூச்ச சுபாவம் கொண்ட மணிஷ் சங்கர பிரசாத்துக்கு இது வியர்வையை வரவழைத்தது. திடீரென அவர் மயங்கினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார். இத்தனை மாணவிகள் மத்தியில் தனி ஒரு ஆணாக தேர்வு எழுதுவதை நினைத்து தனக்கு பதட்டம் ஏற்பட்டு மயக்கமடைந்ததாக அவர் கூறியுள்ளார். தனது பிரச்சனையை மாணவர் அத்தையிடம் கூறும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இச்செய்தி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி கவனம் பெற்று வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடித்த 96 படத்தில் காதலியிடம் பேச தைரியம் இல்லாமல், காதலன் மயங்கி விழும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..AIADMK: அதிமுக பொதுக்குழு விவகாரம்; ஈபிஎஸ் Vs ஓபிஎஸ் - யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்.? டாப் 5 ட்விஸ்ட்ஸ் !!