பீகாரில் பா.ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில் 76 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன, 72 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலத்தில், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்தது. லாலுகுடும்பத்தினர், மகன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததையடுத்து, மகா கூட்டணியை உடைத்து, பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.

மறுநாளே, பா.ஜனதா ஆதரவுடன், மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார்.நிதிஷ் குமார் மற்றும் லாலு ஒருவரை ஒருவர் சாடி வருகிறார்கள்.

இந்நிலையில், பா.ஜனதா-கூட்டணியுடன் ஆட்சி அமைத்துள்ள நிதிஷ் குமாரின் புதிய அமைச்சரவை சமீபத்தில் பதவி ஏற்றது. இதில்  29 அமைச்சர்களில் 22 பேர் கிரிமினல்வழக்குகளை எதிர்க்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான கிரிமினல்வழக்குகள் தொடர்பாக விசாரணை நடக்கிறது.

தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தாக்கல் செய்த விபரங்களை கொண்டு தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ( ஏடிஆர்)  வெளியிட்டு உள்ள அறிக்கையில், 76 சதவித அமைச்சர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொள்கிறார்கள்.

லாலு ஊழல்வாதி என சாடிவிட்டு மகா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்புதிய அமைச்சரவையில் 22 கறைபடிந்த அமைச்சர்கள் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் 9 பேர் மிகவும் தீவிரமான கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொள்வதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து உள்ளனர். நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை எதிர்க்கொள்கிறார்கள்.  பிற அமைச்சர்கள் மீது திருட்டு, மோசடி என பல்வேறு கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொள்கிறார்கள்.

பீகாரில் மகா கூட்டணி ஆட்சியில் இருந்த போது 69 சதவீத அமைச்சர்கள் 19 பேர் ஊழல், கிரிமினல் வழக்கு இருந்து. இப்போது 76 சதவீதம் பேர் மீது கிரிமினல்வழக்குஇருக்கிறது. கடந்த மகா கூட்டணி அரசில் 79 சதவித அமைச்சர்கள் (22 பேர்)கோடீஸ்வரர்கள், இப்போது 72 சதவித அமைச்சர்கள் (21 பேர்) கோடீஸ்வரர்கள் என தெரியவந்து உள்ளது.