பெருந்தொற்றின் ஆபத்து இந்தியா முழுவதும் கணிசமாக குறைந்துள்ளதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் காஷ்மீர் சென்று வருகின்றனர்.

காஷ்மீரை சுற்றியுள்ள தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் துறை அளித்துள்ள ஒரு தகவலின்படி, அசாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள பிற பகுதிகளில் இருந்து, கிட்டத்தட்ட 25,000 சுற்றுலாப் பயணிகள் கடந்த 2022ம் ஆண்டு காஷ்மீருக்கு சுற்றுலாவிற்காக வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல இந்த 2023ம் ஆண்டின் கடந்த அரையாண்டில், வடகிழக்கில் இருந்து காஷ்மீர் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 12,000 என்றும், இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு, கடந்த ஆண்டை விட கூடுதலாக சுமார் 5000 சுற்றுலா பயணிகள் வடகிழக்கில் இருந்து காஷ்மீருக்கு வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகும் சுற்றுலா துறை கூறியுள்ளது. 

”உங்களுக்கு வெட்கமே இல்லையா” மணிப்பூர் வீடியோவை கண்டித்த மம்தாவை காட்டமாக விமர்சித்த பாஜக

காஷ்மீரில் நிலவி வந்த பதட்டம் குறைந்துவிட்டதாலும், பெருந்தொற்றின் ஆபத்தும் கணிசமாக குறைந்துள்ளதாலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் உள்ள பிற இடங்களை ஒப்பிடும்போது, ஜம்மு-காஷ்மீர் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் சுமார் 1.88 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து பெரும் சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வரத்து, இரண்டு கோடியைத் தாண்டும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. 

காஷ்மீர் தற்போது அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு பாதுகாப்பான உணர்வை தருகின்றது என்றும். இந்த இயற்கை சூழல், தங்களை ஒரு புனித இடத்தில் இருப்பதுபோல உணரவைப்பதாகவும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த அரசு மரியாதையின்றி அடக்கம் செய்யப்பட்ட உம்மன் சாண்டி உடல்