” உங்களுக்கு வெட்கமே இல்லையா” மணிப்பூர் வீடியோவை கண்டித்த மம்தாவை காட்டமாக விமர்சித்த பாஜக

மணிப்பூர் வீடியோ குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக பொறுப்பாளர் அமித் மாள்வியா அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

Do you have any shame at all Mamata Banerjee bjp's amit malviya criticise

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில்மேற்குவங்க முதலமைச்சர் மம்தா இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரின் ட்விட்டர் பதிவில் “ வெறிபிடித்த கும்பல் இரண்டு பெண்களை கொடூரமாக நடத்துவதை காட்டும் மணிப்பூரின் கொடூரமான வீடியோவைக் கண்டு மனம் உடைந்டேன்.. கோபமடைந்தேன். விளிம்புநிலைப் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளைக் கண்ட வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் புரிந்து கொள்ள முடியாதது. மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது. குற்றவாளிகளின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த நிலையில் மேற்கு வங்க பாஜக பொறுப்பாளர் அமித் மாள்வியா மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ மம்தா பானர்ஜியிடம் உங்களுக்கு வெட்கமே இல்லையா? ஜூலை 8 ஆம் தேதி, பஞ்சாயத்து தேர்தல் நாளில், ஒரு கிராம சபா வேட்பாளரான பெண், தாக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, ஹவுராவின் பஞ்ச்லாவில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார், நீங்கள் இருக்கும் நபான்னோவில் அருகில் தான் இந்த சம்பவம் நடந்தது. பாஜக வற்புறுத்தும் வரை உங்கள் காவல்துறை எஃப்ஐஆர் கூட எடுக்கவில்லை.

 

அதே கிராம சபையின் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஹேமந்தா ராய், அல்ஃபி எஸ்கே, சுகமல் பஞ்சா, ரணபீர் பஞ்சா, சஞ்சு தாஸ், நூர் ஆலம் மற்றும் 40-50 ஆண்களுடன் சேர்ந்து, அந்த பெண்ணை நிர்வாணமாக்குவதற்கு முன், அவரின் மார்பில் அடித்து, சேலையை கிழித்து, உள்ளாடைகளை அகற்றினர். மேற்கு வங்காளத்தின் உள்துறை அமைச்சரான நீங்கள், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. உங்கள் உடைந்த இதயம், சீற்றம் மற்றும் நீதியின் மீதான போலி அக்கறை இல்லாமல் உலகம் ஒரு சிறந்த இடமாக உள்ளது.  நீங்கள் ஒரு தோல்வியுற்ற முதலமைச்சர். முதலில் வங்காளத்தில் கவனம் செலுத்துங்கள்..” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ‘INDIA’ எதிர்பார்க்கிறது - கார்கே ட்வீட்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios